(அஸ்லம் எஸ்.மௌலானா)
சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் புதன்கிழமை (13) நடைபெற்ற வைபவம்
ஒன்றில் பிரதம் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக்
குறிப்பிட்டார்.
இந்த வைபவத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீல்,
சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம், கல்முனை மாநகர சபை
உறுப்பினர்களான ஏ.ஏ. பசீர், ஏ. நிசார்டீன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது;
“எமது நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக பொது பல சேனா அமைப்பினர்
மேற்கொண்டு வருகின்ற மிக மோசமான நடவடிக்கைகளினால் சமூகங்களுக்கிடையிலான
ஒற்றுமை சீர்குலைவதற்கு வழி வகுத்திருப்பதுடன் அப்பாவி முஸ்லிம்களை வெகுவாக
பீதியடையவும் செய்துள்ளன.
சிங்கள மக்களை முஸ்லிம்களுக்கு எதிராக தூண்டி விட்டு இந்த நாட்டு
முஸ்லிமகளின் கல்வி, கலாசார, பொருளாதார மையங்களை சிதைப்பதற்கு திட்டமிட்டு
செயலாற்றி வருகின்ற பொதுபல சேனா எனும் சிங்கள கடும்போக்கு இயக்கமானது
ஹலால், ஹிஜாப் என்று இஸ்லாமிய விரோத செயற்பாடுகளை விஸ்தரித்து வருகின்றது.
ஹலால் விடயத்தில் வெற்றி கண்டுள்ள பேரினவாதிகள் தமது அடுத்த இலக்கு
ஹிஜாப் என்று முழங்கியுள்ளனர். முஸ்லிம் பெண்கள் இனி ஹிஜாப் அணியக் கூடாது,
சிங்களப் பாடசாலைகளில் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவிகளும் ஆசிரியைகளும்
ஹிஜாபின்றியே பாடசாலைக்கு வர வேண்டும் என்றும் அரச அலுவலகங்களில்
கடமையாற்றும் முஸ்லிம் பெண்களும் இவ்வாறே செயற்படவேண்டும் என்றும் அவர்களை
கட்டாயப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படவுள்ளன.
இவற்றுக்கு நாம் இடமளிக்க முடியாது. இதற்காக நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய இக்கட்டான தருணத்தில் இருக்கின்றோம்.
முஸ்லிம்களின் சமய உரிமைகளை பாதுகாப்பதற்காக அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து போராட வேண்டிய
இந்த சூழ்நிலையில் நமக்குள் இருக்கின்ற பிரிவுகளையும் பிளவுகளையும் களைந்து ஒற்றுமைப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
இந்த சூழ்நிலையில் நமக்குள் இருக்கின்ற பிரிவுகளையும் பிளவுகளையும் களைந்து ஒற்றுமைப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment