Friday, March 15

பாரதவின் சகோதரி ஐ.நா மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் உரையாற்றவுள்ளார்

பாரதவின் சகோதரி ஐ.நா மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் உரையாற்றவுள்ளார்

 
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் சகோதரி, ஜெனீவா மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இன்றைய தினம் உரையாற்றவுள்ளார்.பாரதவின் குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் இம்முறை மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் பங்கேற்கின்றனர்.பாரதவின் படுகொலை மற்றும் ஏனைய அரசியல் படுகொலைகள் தொடர்பில் உரையாற்றப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
 
மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் பங்கேற்று உரையாற்றுமாறு தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் சிரேஸ்ட சகோதரி சித்ரா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.பாரத மட்டுமன்றி இவ்வாறான பல அரசியல் படுகொலைகள் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.துமிந்த சில்வாவிற்கு எதிராக சட்டம் ஒழுங்கை பேணுவோர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
 
கனடாவில் வாழ்ந்து வரும் பாரதவின் சகோதர, சகோதரிகளும், அவர்களது பிள்ளைகளும் இந்த அமர்வுகளில் பங்கேற்பதற்காக ஜெனீவா விஜயம் செய்துள்ளனர்.பாரதவின் மற்றுமொரு சகோதரியான ஸ்வர்னா குணரட்ன மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments:

Post a Comment