ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் ஹலால் நெருக்கடி தொடர்பில் முன்னாள் பிரதமர்
ரட்ணசிறி விக்கிரமநாயக்கா தலைமையில் அமைச்சரவை உபகுழுவொன்று
நியமிக்கப்பட்டது. இந்தக்குழு இனிமேல் ஒன்றுகூடாதென
அறிவிக்கப்பட்டதையடுத்து விசனமடைந்துள்ள முஸ்லிம் அமைச்சர்கள்
கையொப்பமிட்டு அவசர கடிதமொன்றை ரட்ணசிறி விக்கிரமநாயக்காவுக்கு அனுப்பி
வைத்துள்ளனர்.
4 பிரதான முஸ்லிம் அமைச்சர்கள் இந்த கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர். ஹலால்
நெருக்கடி தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உபகுழுவை
உடனடியாக கூட்டுமாறு வலியுறுத்தியே முஸ்லிம் அமைச்சர்கள் இந்த கடிதத்தை
அனுப்பிவைத்துள்ளனர்.
முஸ்லிம் அமைச்சர்களுக்கு ஆதரவளித்து மேலும் சில அமைச்சர்களும் இந்த
கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளதாக அமைச்சர் வட்டாரங்களிலிருந்து அறியவருகிறது.

No comments:
Post a Comment