Monday, March 25

குருநாகலில் முஸ்லிம் விரோத போஸ்டர்: சத்தார் பொலிஸில் முறைப்பாடு !


இன்று குருநாகல் நகரில் இனங்களுக்கிடையே மனக் கசப்தைத் தூண்டும் வகையில் இரண்டு அமைப்புக்களின் பெயர் குறிப்படப்பட்ட பதாதைகளும், சுரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன.
இதில் முஸ்லிம்களின் உரிமையைக் காக்கும் அமைப்பு என்ற பெயரில் சிங்கள மக்களுக்கு எதிராகவும் மற்றும் எத்துகல்புர சிங்களயோ என்ற பெயரில் முஸ்லிம்களுக்கு எதிராகவும் கொண்ட வாசகங்கள் அமைந்திருந்தன.

இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த குருநாகல் மாவட்ட ஸ்ரீ சு. கட்சி அமைப்பாளர் அப்துல் சத்தார் உடனடியாக குருநாகல் பொலிஸ் நிலையம் சென்று இது தொடர்பான முறைப்பாட்டினை செய்தார். குருநாகல் பொலிஸ் நிலையத்தின் முறைப்பாட்டு இலக்கம் சீ, ஐ. பீ. (4)298/344/2013-03-25 என்பனவாகும்.
இரு சமூகங்களுக்கிடையில் பிளவை ஏற்படுத்தச் செய்யும் சட்ட விரோதச் செயல் என்றும் இதனுடன் தொடர்புடையவர்களைத் தேடி அவர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி அம்முறைபாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment