Thursday, March 14

ஹலால் சான்றிதழ் வழங்கும் அதிகாரம் முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்திடம் ?

நாட்டில் ஹலால் சான்றிதழ் வழங்குவது தொடர்பான அதிகாரம் சமய விவகார அமைச்சின் கீழுள்ள முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்திடம் ஒப்படைக்கும் வகையிலான ஆலோசணையொன்றை   அமைச்சரவை உபகுழு அமைச்சரவையில் சமர்பிக்கவுள்ளதாக நம்பகரமான வட்டாரங்கள் தெரிவித்தன.
 
குறித்த அமைச்சரவை உப குழு அனைத்து தரப்பினரையும் சந்தித்து கருத்துக்களை பதிவு செய்துள்ள நிலையிலேயே மேற்படி முடிவு எட்டப்பட்டுள்ளதாக அந்த செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன.
 
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபைக்கு சட்டரீதியாக ஹலால் சான்றிதழ் வழங்கும் உரிமை இல்லை என்பதுடன் முஸ்லிம் மக்களுக்கு ஹலால் உணவை உட்கொள்ளும் உரிமை உள்ளதென்பதை  அமைச்சரவை உப குழு ஏற்றுக்கொண்டுள்ளது.
 
இந்நிலையிலேயே ஹலால் சான்றிதழ் வழங்குவதற்கான உரிமை முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படலாம் என தெரிய வருகிறது.
 
முன்னதாக ஹலால் சான்றிதழை வழங்குவதற்கான சட்டரீதியான அதிகாரம் உலமா சபைக்கு கடந்த 2007 ஆம் ஆண்டு வழங்கப்பட்டுள்ளது.
 
எனினும் 2008 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் அவ்வதிகாரமானது உலமா சபையிடம் இருந்து மீள பெறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹலால் சான்றிதழை வழங்குவதற்கான சட்டரீதியான அதிகாரம் உலமா சபைக்கு இல்லை என்பதை அமைச்சரவை உப குழு ஏற்றிருப்பதாகவும்  எனினும் முஸ்லிம்களுக்கு ஹலால் உணவை உண்ணும் உரிமையையும் மறுக்க முடியாது என அவர்கள் தீர்மானித்துள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment