Monday, March 18

மது போதையிலிருந்த பிக்கு கைது

மது போதையுடன் வேன்   ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த  பெளத்த பிக்கு உள்ளிட்ட மூவரை  நகொடை பொலிசார் கைது செய்துள்ளனர்.
வெல்லம்பிட்டிய பிரதேசத்திலிருந்து குறித்த வேனில் பயணித்த போதே பொலிசாரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்படும் போது  இம்மூவரும்  அதிக போதையுடன் காணப்பட்டதாகவும் மேலதிகமாக மது போத்தல்களும் அவித்த கடலையும் வேனிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

வைத்திய சாலையில் சந்தேக நபர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி மூவரும் போதையில் உள்ளதை பொலிசார் உறுதிப்படுத்தினர்.
கைது செய்யப்பட பிக்கு இரத்மலானை பிரதேச விகாரை ஒன்றில் கடமையாற்றுபவர் என தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment