Monday, March 25

தம்புள்ளையில் மீண்டும் களமிறங்குகிறார் இனாமலுவே தேரர்

 
தம்புள்ளை நகரில் கடந்த ஏப்ரல் மாதம் நடைப்பெற்ற துரதிஷ்டவசமான சம்பவவத்துக்கு ஒருவருடம் பூர்த்தியாகவுள்ளது. இந்நிலையில் குறித்த தம்புள்ளை புனித பூமி திட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் இருப்பது அதனை விட சக்திவாய்ந்த போராட்டம் ஒன்றுக்கு வழிவகுக்கும். அதற்கு, உரிய அதிகாரிகள் இடம் வைக்காது புனித பூமி திட்டத்தை உடன் நடைமுறை படுத்துமாறு ரங்கிரி  தம்புள்ளை விகாரையின் விகாராதிபதியான இனாமலுவே ஸ்ரீ சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார். 
 
தம்புள்ளை புனித பூமி திட்டம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
 
அரச அதிகாரிகள் ஜனாதிபதியின் யோசனைகளை செயற்படுத்தாது மக்களை இன்னல்களுக்குள் தள்ளுகின்றனர். 
 
தம்புள்ளை புனித பூமி திட்டம் 30 வருடங்களாக கவனிப்பாரற்று கிடந்தது. இதனால் கடந்த ஆண்டு துரதிஷ்ட வசமாக மக்கள் அதற்காக ஆர்ப்பாட்டம் செய்யவேண்டி ஏற்பட்டது. இதனை அடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவும் இது விடயத்தில் தலையிட்டனர். 
குறித்த திட்டத்தை அடுத்த வெசாக் தினத்துக்கு முன் செயற்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அவர்கள் அப்போது தெரிவித்திருந்தனர். எனினும் அதிகாரிகள் இன்னும் அதனை செய்யவில்லை.
 
தம்புள்ளை நகரில் கடந்த ஏப்ரல் மாதம் நடைப்பெற்ற துரதிஷ்டவசமான சம்பவவத்துக்கு ஒருவருடம் பூர்த்தியாகவுள்ளது.
 
இந்நிலையில் குறித்த தம்புள்ளை புனித பூமி திட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் இருப்பது அதனை விட சக்திவாய்ந்த போராட்டம் ஒன்றுக்கு வழிவகுக்கும்.
 
அதற்கு,  உரிய அதிகாரிகள் இடம் வைக்காது புனித பூமி திட்டத்தை உடன் நடைமுறை படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment