ஏற்றுமதிப்பொருட்களுக்கு மட்டும் ஹலால் சான்றிதழ் வழங்கப்படவுள்ளதாக உலமா
சபை எடுத்துள்ள தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என முஸ்லிம்
ஒற்றுமைக்கும் உரிமைக்குமான அமைப்பு தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வமைப்பினால் விநியோகிக்கப்பட்டுள்ள துண்டுப்பிரசுரத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த துண்டுப்பிரசுரத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஏற்றுமதிப்பொருட்களுக்கு மட்டும் ஹலால் சான்றிதழ் வழங்குவதால் இலங்கையில் வாழும் முஸ்லிம்களுக்கு எந்த பயனும் கிடையாது. ஜம்இய்யத்துல் உலமாவின் சான்றிதழ் இல்லாவிட்டால் வெ ளிநாட்டில் உள்ள முஸ்லிம்கள் பட்டினியால் மரணிக்கப்போவதில்லை. வேறுநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்து உண்ணக்கூடும்.

இலங்கையில் ஹலால் சான்றிதழ்களை எதிர்பார்ப்பவர்கள் இங்குள்ள முஸ்லிம்களே. எனவே ஜம்இய்யதுல் உலமாவினால் ஏற்றுமதிக்காக மட்டும் ஹலால் சான்றிதழ் வழங்க எடுக்கப்படும் முடிவானது, பொது பல சேனாவை சந்தோஷப்படுத்துவதற்காகவும், அரசு அந்நிய செலாவணியை இழக்காமல் பாதுகாக்க எடுக்கும் முடிவுகளேயாகும். அத்துடன் வழிகாட்டலை எதிர்பார்க்கும் இலங்கை முஸ்லிம்கள் ஹராத்தை உண்டாலும் பரவாயில்லை என கைவிடும் செயலுமாகும்.
எனவே ஹலால் சான்றிதழ் வழங்குவதை வழமைபோன்று மேற்கொள்ள வேண்டும் எனக்கேட்டுக்கொள்கிறோம்.. பொது பல சேனாவக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வது தொடர்பில் சிந்திக்கும்படி வேண்டுகிறோம்.
இலங்கையில் ISO, TQM போன்ற சான்றிதழ்கள் அரச சார்பற்ற நிறுவனங்களால் வழங்க முடியுமாக இருந்தால் ஏன் ஹலால் சான்றிதழ் ஜம்இய்யதுல் உலமாவினால் வழங்கப்பட முடியாது என்ற அடிப்படை உரிமை மீறல் வழக்கினை தாக்கல் செய்யுமாறும் முஸ்லிம் ஒற்றுமைக்கும் உரிமைக்குமான அமைப்பு வேண்டுகோள்விடுத்துள்ளது.
No comments:
Post a Comment