பெப்பிலியான – கொஹுவல வீதியில் அமைந்துள்ள பெஷன்பாக் நிறுவனத்தின் மீது நேற்று இரவு குண்டர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது
பொதுபல சேனா அமைப்பின் பௌத்த மத குரு ‘ஞானசார தேரரே இந்த முஸ்லிம் வர்த்தக நிலையம் மீதான தாக்குதலை மறைமுகமாக தூண்டியதாக இலங்கையின் நீதி அமைச்சரான ரவூப் ஹக்கீம் குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், சிறுபான்மை மக்கள்
மீது ஒரு உதிரிக்கும்பல் இலக்கு வைத்து தாக்குவதற்கு அரசாங்கமே இடமளித்ததாக
அமைந்துவிடும் என்றும் ரவூப் ஹக்கீம் கூறுகிறார்.
இதேவேளை, இலங்கையில் முஸ்லிம்கள் கௌரவமாக வாழ்வதற்கு தமது அமைச்சுப் பதவிகள்தான் தடையாக இருக்குமானால், அதனை துறக்க தாம் தயாராக இருப்பதாக இலங்கையின் மற்றுமொரு அமைச்சரான ரிசாத் பதியுதீன் கூறியுள்ளார். ஏனைய முஸ்லிம் அமைச்சர்களும் அதற்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment