கொழும்பு செய்தியாளர் :
நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் நிறுத்தப் படவேண்டும்.
முஸ்லிம்களுக்கு எதிராக பல்வேறு பட்ட வடிவில் துன்புறுத்தல்கள் அரச
ஆதரவுடன் தீவிரவா குழுக்களினால் மேற்கொள்ளப் படுகிறது . என ஐக்கிய தேசியக்
கட்சியின் பாராளுமன்ற
உறுப்பினர் மங்கள சமரவீர குற்றம்சாட்டியுள்ளார் . கொழும்பில் இடம்பெற்ற
ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர்
மேற்கண்டவாறு தெரவித்துள்ளார் .
மேலும் அவர் தெரிவித்துள்ள தகவலில் ,
தீவிரவாத அமைப்புக்களை போஷித்து வளர்க்கும் அரசாங்கம் நாட்டில் இன்னொரு
பயங்கரவாத அமைப்பை உருவாக்குவதற்கு வழிசமைக்கின்றது . நாட்டில்
முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் நிறுத்தப் படவேண்டும். அல்லது மத்திய
கிழக்கு நாடுகளில் தொழில் புரியும் தொழிலாளர்கள் அங்குள்ள தீவிரவாத
குழுக்களினால் துன்புறுத்தல்களுக்கு ஆளாவார்கள்.
. யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர்.
நாட்டில் 65 வழிபாட்டு இடங்கள் பல்வேறு தீவிரவாத அமைப்புக்களால் அழிக்கப்
பட்டுள்ளது .இதேவேளை, இலங்கையில் நான்கு பிரதான மதங்களை தவிர வேறு மதங்கள்
இருக்கக் கூடாதென அரசாங்கத்தினால் சட்டமொன்று உருவாக்கப்படவுள்ளது. இது
எவ்வாறு முடியும்? நான் தென்னை மரத்தை வணக்கவும் எனக்கு உரிமை இருக்கிறது
அதேபோன்று எவருக்கும் எந்த மதத்தையும் பின்பற்றுவதற்கு உரிமையும்
சுதந்திரமும் உள்ளதுஎன்றும் தெரிவித்துள்ளார் .