அந்த அறிக்கையில் நாட்டில் வெளிநாட்டு
,உள்ளநாட்டு சில சக்திகள் நாட்டின் அமைதியை குழப்ப சதி முயற்சியில்
ஈடுபட்டுள்ளன. என்றும் இந்தச் சூழ்நிலையில் நாட்டு மக்கள் அனைவரும்
நாட்டின் நன்மைக்கும் சமாதானத்தை பாதுகாத்துக் கொள்வதற்கும் முனைப்புடன்
செயற்படுவது அவர்களின் கடமையாகும் எனவும் தகவல் திணைக்களத்தின் ஊடக
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட அறிக்கையில் மேலும்
தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,சர்வதேச மட்டத்தில் நாட்டின் நற்பெயரை இல்லாமல்
செய்வதற்கும் உள்நாட்டில் சமூகங்களுக்கிடையில் கலவரங்களை உருவாக்கி நாட்டை
அபாய நிலைக்குள்ளாக்க பல்வேறு சக்திகள் செயற்பட்டு வருகின்றது.
இச்சந்தர்ப்பத்தில் இனங்களுக்கிடையில் ஒற்றுமையையும் சக வாழ்வினையும்
ஏற்படுத்துவதற்கு மக்களைத் தெளிவுப்படுத்த வேண்டியது ஊடகங்களின்
கடமையாகும். ஊடகங்களின் முழுமையான உதவியை தகவல் திணைக்களம் எதிர்பாக்கிறது.
தேசிய மற்றும் தனியார் வளங்கள் உடமைகளை
சேதங்களுக்குள்ளாக்கும் ஜனநாய விரோத பயங்கரவாத நடவடிக்கைகளிலிருந்தும்
தவிர்ந்து கொள்ளுங்கள். அத்தோடு இவ்வாறான முயற்சிகள் தொடர்பாக
அரசாங்கத்துக்கு தகவல்களை வழங்குங்கள்.
நூற்றாண்டுகளாக பல்வேறுபட்ட சமயங்கள்
மற்றும் கலாசாரங்களுடனான மக்கள் இலங்கையர் என்ற தேசிய உணர்வோடு ஒற்றுமையாக
வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இவ்வாறாக நாட்டில் பேதங்களை உருவாக்க
மேற்கொள்ளப்படும் சதி முயற்சிகளைத் தோற்கடிக்க நாட்டு மக்கள் அனைவரும்
ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.