Thursday, March 21

ஜெனீவாவில் முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு ஆதரவு

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட  பிரேரணைக்கு 25 நாடுகள் ஆதரவு வழங்கியுள்ளன. அமெரிக்க பிரேரணைக்கு எதிராக 13 நாடுகள் வாக்களித்தன. 8 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்தியா இப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளது.
 அமெரிக்க பிரேரணைக்கு எதிராக வாக்களித்தவற்றில் 5 நாடுகள் முஸ்லிம் நாடுகளாகும்.
இந்தோனேசியா, கட்டார், பாகிஸ்தான், ஐக்கிய அரபு இராச்சியம், குவைத் ஆகிய முஸ்லிம் நாடுகளே இவ்வாறு இலங்கைக்கு ஆதரவாகவும் அமெரிக்க பிரேரணைக்கு எதிராகவும் வாக்களித்துள்ளன.
இதேவேளை லிபியா இலங்கைக்கு எதிராக வாக்களித்துள்ளதுடன் மற்றும் கஸகஸ்தான் , மலேசியா ஆகிய நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாது நடுநிலை வகித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment