பாகிஸ்தானிய முன்னாள் ஜனாதிபதி முஷர்ரப் வெள்ளிக்கிழமை
நீதிமன்றமொன்றுக்கு வந்த போது சட்டத்தரணியொருவர் அவர் மீது பாதணியை வீசி
தாக்குதல் நடத்தியதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
படுகொலை சதித்திட்டம் மற்றும் நீதிபதிகளை பணிநீக்கம் செய்தமை போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் தனக்கு வழங்கப்பட்ட பிணையை நீடிக்க கோரியே முஷர்ரப் சிந்து மாகாண உயர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.
இதன் போது சுமார் 20 சட்டத்தரணிகளைக் கொண்ட குழுவினர் அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். அவர்கள் சர்வாதிகாரி முஷர்ரப் தூக்கிலிடப்பட வேண்டும் என கோஷம் எழுப்பினர். இதன் போதே சட்டத்தரணிகளில் ஒருவர் முஷர்ரப்பை அவமதிக்கும் வகையில் பாதணியை வீசியுள்ளார்.
No comments:
Post a Comment