March 22, 2013 10:05 am
மட்டக்களப்பு புதிய காத்தான்குடி நூராணியா பள்ளிவாயலை அண்டிய பகுதிகளில்
முஸ்லிம்களே! நீங்கள் முஸ்லிம்கள் என்றால் கடைப்பிடிக்க வேண்டியவை எனும்
தலைப்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
நேற்று வியாழக்கிழமை நள்ளிரவிலேயே இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
´முஸ்லிம்களே! நீங்கள் முஸ்லிம்கள் என்றால் கடைப்பிடிக்க வேண்டியவை´´ எனும் தலைப்பில் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகளில்
*அம்பாறை தெயட கிருளவை பகிஸ்கரித்தல்.
*ஹராமான உணவுகளை இணங்கண்டு தெரியப்படுத்தல்.
*25ம் திகதி நாடு தழுவிய ரீதியில் முஸ்லிம் உரிமைகள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சாத்வீகப் போராட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கல்.
*முஸ்லிம் அமைச்சர்களே!உடனடியாக அரசை விட்டு வெளியேறுங்கள்.
*முஸ்லிம் பெண்களே! அபாயா (ஹிஜாப்) விடயத்தில் அபாயாவை அணிந்து முஸ்லிம்களின் தனித்துவத்தை அடையாளம் காட்டுங்கள்.
மேற்கூறப்பட்ட விடயங்களை முஸ்லிம்களை கடைப்பிடிக்குமாறு சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கு ஏற்படும் அசாதாரண சூழ்நிலைகளை அடுத்தே இப்படியான சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன.
இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு பாலமுனைப் பகுதியிலும் ´பௌத்தர்கள் ஹலாலை எதிர்க்கின்றனர். நாம் ஹராத்தை எதிர்ப்போம்´´ எனும் தலைப்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(அத தெரண - நிருபர்)

No comments:
Post a Comment