Friday, March 22

பிக்குகள் மீதான தாக்குதலை கண்டித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்

தமிழ் நாட்டில் ஆன்மீக சுற்றுலா மேற்கொண்டிருந்த நிலையில்   இலங்கையை சேர்ந்த பெளத்த பிக்குகள் இருவர் தாக்கப்பட்ட  சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கொழும்பு, மருதானை பள்ளிவாசலின் முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இன்றைய தினம் ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து  இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்றது.

இலங்கை பிரஜைகள் மற்றும் சமாதான நீதவான்களுக்கான மனித உரிமைகள் அமைப்பு இவ்வார்ப்பட்டாத்தை ஏற்பாடு செய்திருந்தது.
மத குருமார்கள் மீதான தாக்குதலை கண்டிக்கும் விதமாக ஆர்ப்பாட்டக்காரர்கள் பதாதைகளை ஏந்தியிருந்தியிருந்தனர்.
எவ்வாறாயினும் குறித்த ஆர்ப்பாட்டத்தில் குறித்த அமைப்பை சார்ந்த ஒரு சிறு குழுவினரே ஈடுபட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment