Thursday, March 7

பொதுபல சேனா சட்டத்தை மீறினால் பொலீஸ் பார்த்துக் கொள்ளும்:கெஹலிய


உத்தியோகப்பற்றற்ற பொலிசார் என தம்மைக் கூறிக் கொள்ளும் பொதுபல சேனாவினர் சட்டத்தை மீறும் வகையில் செயற்பட்டால் உத்தியோகபூர்வ பொலிசார் அதனைப் பார்த்துக் கொள்வார்கள் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் ஊடக அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இன்று பிற்பகல் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.பொதுபல சோனாவினர் சட்டம் ஒழுங்கை மீறும் வகையில் செயற்பட்டால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு பொலிசாருக்கு உரிமையிருக்கிறது.
உத்தியோகப்பற்றற்ற பொலிசாருக்கு எதிராக உத்தியோபூர்வ பொலிசார் தேவையான நடவடிக்கைகளை எடுப்பர் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.தாம் பௌத்த மதத்தை பாதுகாக்கும் நோக்கில் இந்த நாட்டில் உத்தியோகப்பற்றற்ற பொலிசாராக செயற்படுவதாக பொதுபல சேனா அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment