எதிர்வரும் வியாழன்,வெள்ளி ஆகிய தினங்களில் (28.29.) சமய சாத்வீகப்
போராட்டம் ஒன்றை நடத்த கண்டியிலுள்ள சில அமைப்புக்கள் வேண்டுகோள்
விடுத்துள்ளன.
கண்டி சிட்டி ஜம்மியத்துல் உலமா சபை மற்றும் மடவளை பஸார் ஜம்மியத்துல் உலமா
சபை போன்றவை எதிர்வரும் வியாழன்,வெள்ளி ஆகிய இரு தினங்களில் வசதி
வாய்ப்புள்ள சகல முஸ்லிம்களும் நோன்பு நோற்று தான தர்மம் செய்து இயன்றவரை
அவ்விரு தினங்களிலும் கூட்டாகவும் தனியாகவும் நற்காரியங்கள் மற்றும்
அமல்கள் புரிந்து இறைவனிடத்தில் கையேந்திப் பிராத்திக்கும் படி வேண்டுகோள்
விடுத்துள்ளன.
அல்லாஹ் நமக்குத் தந்துள்ள அருட்கொடைகளை மறந்த நிலையில் நாம் பாவ
காரியங்களிலும் ஈடுபடுதல் அல்லது பொடுபோக்குத்தனமாக நற்காரியங்களையும்
நற்பண்புகளையும் விட்டு விடுவது போன்ற நிலைமைகளிலும் எமக்கு சோதனைகள்
ஏற்படலாம். அல்லது இயல்பாகவே இறைவன் எம்மை சோதனைக்குள்ளாக்க முடியும்.
எனவே இறை சோதனைகளில் இருந்து நாம் வெற்றி பெற இயன்றவரை சகிப்புத்
தன்மையுடன் இறைவனுக்குறிய கடமைகளை மட்டுமல்லாது மனிதர்களுக்கும்
சமுகத்திற்கும் மேற்கொள்ள வேண்டிய கடமைகளையும் முறையாக நிறைவேற்றி
பாவமன்னிப்புக் கோருவதன் மூலம் இறைவன் நாடினால் ஜெயம் பெறமுடியும். தற்போது
நாட்டில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் அவ்வாறானதாக இருக்கவும் முடியும்.
அஹ்லாக்குகள் அல்லது நற்பண்புகள் எப்பொழுதும் ஒரு முஹ்மீனிடத்தில்
இருக்கவேண்டும். ஆகக் குறைந்தது இப்படியான ஒரு சந்தர்பத்திலாவது அதனை நாம்
பேணிக் கொள்வதன் முலம் அன்றாட விடயமாகவும் மாற்றிக் கொள்ளமுடியும்.
ஒரு முஹ்மின் வாழ்நாள் முழுதும் ஒவ்வொறு கனப்பொழுதும் இறைபயத்துடன் வாழ்வது
மட்டுமன்றி தன் கடமைகளை நிறைவேற்றி மறு உலக வாழ்விற்கான சேகரிப்புக்களை
மேற்கொள்வது மட்டுமே தனது குறிக்கோளாகவும் வாழ்வாகவும் இருக்கவேண்டும்.
எனினும் மனிதப் பிரவி என்ற அடிப்படையில் பல்வேறு சோதனைகள் பிரச்சினைகளுக்கு
மத்தியில் ஆகக் குறைந்தது இப்படியான ஒரு முயற்சியையாவது மேற்கொள்வது
நல்லது என்ற ஒரு மசூராவின் அடிப்படையில் இதுபற்றி வெள்ளிக்கிழமை ஜூம்மாவின்
பின் அறிவிக்கப்பட்டது.
இன்று நாம் பல்வேறு போராட்டங்களை அவதானிக்கிறோம். சிலர் பாதயாத்திரை,
ஹர்த்தால்,கதவடைப்பு, ஆர்பாட்டம் விழிப்புணர்வு ஊர்வலம், கைப் பிரசுரங்கள்
வெளியீடு... இப்படிப் பல விடயங்களைக் காண்கிறோம்.
அதிலும் விசேடமாக கண்டன அறிக்கைகள் விடுவதையும் நாம் காண்கிறோம். இவை
அனைத்தும் ஒருவருடைய உள்ளத்தில் இருந்து வெளியாகும் ஒரு ஒளியாகக்
கருதமுடியாது. ஆனால் இவை அனைத்தும் ஒரு சாதாரண சம்பிரதாயம் என்பதே மிக்க
வெளிச்சமானது. இப்படியான சம்பிரதாயங்களால் கண்ட பலன் என்ன என்று நாம்
கேட்கத் தேவையில்லை. பாதயாத்திரை சென்று எதைச் சாதித்தார்கள் என்ற வினா
எழக் கூடும். உண்ணா விரதமிருந்து உயிரை விட்டசங்கதிகளும் உண்டு. இதன் மூலம்
வாழ்ந்து கொண்டிருப்பவரின் அனுதாபத்தை குறைந்த மட்டத்தில் சில வேளை
பெமுடியுமே தவிர அதற்கப்பால் எதுவும் கூறமுடியாது.
ஆனால் நோன்பு என்பது அல்லாஹ்விற்குறியது. அதற்கான மகத்தான கூலியையும்
இறைவனே வைத்துல்லான். மறுபுரம் ஒரு முஹ்மீனுடை சக்தி வாய்ந்த ஆயுதமாக துவா
உள்ளது. இன்னொரு புரம் ஸதகா, தான தர்மம் என்பன உள்ளன.
இதுபற்றி கூறும் போது பூமியைப்படைத்த போது அது குழுங்கியதாம். உடனே அல்லாஹ்
மலைகளைப் படைத்ததானாம். அப்போது பூமியின் குழுக்கம் நின்று விட்டதாம்
இதைக்கண்ட மலக்குகள் கேட்டார்களாம் யா அல்லாஹ் இவ்வளவு சக்தி பொருந்திய
ஒன்றை நீ படைத்துள்ளாயே. இதனை விடவும் பலமான ஒன்று உண்டா என மலக்குகள்
கேட்டார்களாம். அதற்கு அல்லாஹ் கூறினானாம் ஆம் படைத்துள்ளேன். இரும்பு
உள்ளது (உலோகம்). இது மலையைத் துகள் துகளாகத் தகர்த்து வீடும்.தூலாக்கி
விடும் என இறைவன் பதில் அளித்ததானாம் . அதைவிடவும் சக்தி வாய்ந்த ஒன்று
உண்டா என மலக்குகள் கேட்டார்களாம். ஆம் உண்டு. இந்த உலோகத்தை நெருப்பானது
உருக்கி விடும்.(அது திரவமாகிவிடும்) என அல்லாஹ் கூறினானாம். அதைவிடவும்
சக்தி படைத்த ஒன்று உண்டா அல்லாஹ் என்று மீண்டும் கேட்டார்களாம். ஆம்
உண்டு. அதுதான் அந்த நெருப்பு உள்ளதே அதை நீர் அனைத்து விடும். அந்தவகையில்
நீர் அதனை விட சக்தி படைத்தது என்று அல்லாஹ் கூறினானாம். அதைவிடவும் சக்தி
படைத்த ஏதும் உண்டா எனக் கேட்கப்பட்டதாம். ஆம் காற்றைப படைத்துள்ளேன். அது
தண்ணீரை ஆவியாகப் பறக்கவைத்து விடும். காற்றின் வேகத்திற்கு தண்ணீரால்
ஈடுகொடுக்க முடியாது போகும் என்று அல்லாஹ் கூறினானாம். அதை விடவும் சக்தி
வாய்ந்த வேறு ஏதும் படைக்கப்பட்டுள்ளதா? என மலக்குகள் மீண்டும்
கேட்டர்hகளாம். அற்கு அல்லா ஆம் உண்டு. அதுதான் எனது நல்லடியான் தனது
வலக்கரத்தால் கொடுப்பான். அது அவனது இடக்கரத்திற்குத் தெரியாது. இதன்
விளைவு அதனை விடவும் சக்தி படைத்தது என்று கூறினானாம் என ஒரு புத்தகத்தில்
எங்கோ நான் வாசித்த நினைவு உண்டு.
எது எப்படியானாலும் பஞ்ச பூதங்களை விடவும் சக்தி படைத்த ஒன்றாக இரகசிய தர்மத்தை அல்லாஹ் ஆக்கிவைத்துள்ளான் எனபதே இதன் கருத்தாகும்.
அடுத்து 'இன்னல்லாஹி மஹஸ்சாபிரீன்' நிச்சயமாக பொறுமையாளர்களுடனே அல்லாஹ் இருக்கிறான். என்ற திருக் குர்ஆன் வசனமும் உண்டு.
இங்கு மூன்றுக்கு மேற்பட்ட சக்திகள் ஒன்றாகின்றன.முதலாவது நோன்பு.
இரண்டாவது துவா பிராத்தனை. மூன்றாவது இரகசியக் கொடை, நான்காவது
பொறுமை.(சகிப்பு)
எனவே மேற் சொன்ன பிரகாரம் நாம் நோன்பு நோற்று தான தர்மம் செய்து
இறைவநிடத்தில் பிராத்தனையை பொறுமையாக ஒப்பு விப்போமாயின் அதற்கு பலன்
இருக்கத்தான் செய்யும். அத்துடன் அல்லாஹ் குறிப்பிடுகின்றான் 'முஸ்லீம்களே
ஒற்றுமை என்ற கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்' என்று.
நாம் அனைவரும் ஆகக் குறைந்தது இருதினங்களாவது துர்குணங்களை மறந்து இறைவன்பால் ஒன்றிணைந்து செயற்படவும் ஒரு சந்தர்ப்பமாகிறது.
இன்னும் பல விடயங்களைக் குறிப்பிட முடியும். விரிவஞ்சி சுருக்கிக் கொள்கிறேன்.
எனவே இப்படியான ஒரு கூட்டு முயற்சியை மேற்கொள்வதன் மூலம் இன்றைய பேரினவாத
சவால்களுக்கு ஒரு தீர்வாகவும் மறு உலக வாழ்விற்கு நன்மையைத்
தரக்கூடியதாகவும் இறைவனின் சோதனைக்கு எமது துலங்களைக் காட்டிவர்களானவும்
நாம் மாற வாய்பு உண்டு என்பது எனது ஒரு சிறிய கருத்தாகும்.
எனவே முஸ்லிம் சகோதர சகோதரிகள் இதுவிடயமாக சற்று சிந்திப்பது நல்லதெனக் கருதுகிறேன்.

No comments:
Post a Comment