கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இன்று மாலை தனது அலுவலகத்தை
சோதனையிட்டதாகவும் தன்னைக் கைது செய்ய அவர்கள் முயற்சி செய்வதாகவும்
தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் அசாத் சாலி விடிவெள்ளிக்குத்
தெரிவித்தார்.
இரண்டு ஜீப் வண்டிகளில் வருகை தந்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தனக்கு
எதிராக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பிலேயே
கைது செய்யப் போவதாகவும் தெரிவித்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஜெனீவா பிரேரணைக்குப் பின்னர் அரசாங்கம் தனக்கெதிராக நடவடிக்கை எடுக்கும்
என்பதை தான் ஏலவே எதிர்பார்த்திருந்ததாகக் குறிப்பிட்ட அவர் இது தொடர்பில்
தான் ஏலவே ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்ததாகவும்
சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment