நியூயார்க் நகரை நோக்கி
வந்துகொண்டிருக்கும் மிகப்பெரிய விண்கல்லை எப்படி சமாளிப்பது என்பது குறித்து ஆலோசிக்க
வேண்டும். விண்கல்லை திசைதிருப்ப முயற்சி செய்ய வேண்டும். தேவைப்பட்டால் இதற்காக நீங்கள்
பிரார்த்திக்க வேண்டும்.
பூமிக்கு அருகில் சுற்றிக்கொண்டிருக்கும்
95 சதவிகித விண்கற்களை நாசா கண்காணித்து வருகிறது. அதில் ஒரு கிலோ
மீட்டர் விட்டமுடைய விண்கற்களும் அடங்கும். இந்த விண்கல்லானது மனித நாகரிகத்தை அழித்துவிடும் அபாயம் இருக்கிறது.
10,000-க்கும் மேற்பட்ட நகரங்களை தாக்கி
அழிக்கும் விண்கற்களில், 50 மீட்டர்
விட்டமுடைய வெறும் 10 சதவிகித
விண்கற்கள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளன.
விண்ணிலிருந்து அறியமுடியாத விண்பாறைகள் மற்றும் விண்கற்கள் பூமியை தாக்குவதை
சமாளிப்பது குறித்து முடிவெடுக்கவேண்டியது அனைத்தும் அமெரிக்காவை சார்ந்து இருக்கிறது.
கடந்த பிப்ரவரி மாதம் 17 மீட்டர் விட்டமுடைய விண்பாறை ஒன்று
ரஷ்யாவின் செல்யாபின்ஸ்க்
என்னுமிடத்தை நோக்கி வந்தது. அந்த விண்பாறையானது ஆகாயத்திலேயே குண்டுகளை வீசி
தகர்க்கப்பட்டது. அப்போது அப்பகுதி வீடுகளின் ஜன்னல்கள் உடைந்து சேதமடைந்தன. இதில் 1500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.
அதன் பிறகு மிகப்பெரிய விண்கல் ஒன்று
சமீபத்தில் பூமியிலிருந்து 17,200 மைல் தூரத்திற்கு அப்பால் வந்து சென்றதை நமது விண்கலங்கள் படமெடுத்தன.
பூமியை தாக்கும் விண்கற்களை
திசைதிருப்புவது சம்பந்தமாக தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது குறித்து பன்னாட்டு
ஒத்துழைப்பை நாசா எதிர் நோக்கிக்கொண்டிருக்கிறது.
இவ்வாறு பிரதிநிதிகள் கருத்து
தெரிவித்தனர்.
No comments:
Post a Comment