முஸ்லிம் பெண்ணொருவரின் பர்தா இனந்தெரியாத குழுவினரால் இன்று
திங்கட்கிழமை காலை அபகரிப்பதற்கான
முயற்சியொன்று மன்னம்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
மன்னம்பிட்டி தபால் நிலையத்தில் தபாலக அதிபராக பணி புரியும்
பெண்ணின் பர்தாவையே
இனந்தெரியாத குழுவினரால் அபகரிக்க முயற்சிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு – மட்டக்களப்பு
பிரதான வீதியிலிருந்து சுமார் 200 மீற்றர் தூரத்திலுள்ள தபாலகத்திற்கு
நடந்து செல்லும்போதே மன்னம்பிட்டி பிரதான வீதியில் இந்த சம்பவம்
இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளிலில் வந்த இந்த குழுவினர் தலைகவசம் அணிந்திருந்தமையினால்
குறித்த பெண்ணினால் இந்த குழுவினரை இனங்காண முடியாது போயுள்ளது.
மன்னம்பிட்டி தபால் நிலைய தபால் அதிபராக கடந்த பெப்ரவரி மாதம் இந்த
பெண் நியமனம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை வேலை முடிந்து திரும்பும்போதும்
ஒரு குழுவினரால்
பர்தாவை கழற்றுமாறு இந்த பெண் வேண்டப்பட்டுள்ளார்.எனினும் இதனை குறித்த பெண் கவனத்திற்கு
கொள்ளவில்லை. இதனையடுத்தே இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக மன்னப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் குறித்த பெண்ணினால் முறைப்பாடு
செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இது தொடர்பாக கிழக்கு மாகாண தபால் மா அதிபரின் கவனத்திற்கு
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.அமீர் அலி கொண்டுவந்துள்ளார்.
No comments:
Post a Comment