இன்றைய அரசியல் சூழ்நிலை குறித்து
ஆராய்ந்த ஜம் இயத்துல் உலமா தலைமையிலான கூட்டத்தில் அனைத்து தரப்பும்
ஒன்றிணைந்த கூட்டுத்தலைமை ( தேசிய ஷூரா) ஒன்றிற்கான இணக்கம்
காணப்பட்டுள்ளது. ஏற்கனவே நாம் தெரிவித்திருந்தபடி நாளை மறுதினமும்
இன்னுமொரு கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள நிலையில் முஸ்லிம்
புத்திஜீவிகள்,அரசியல் வாதிகள் மற்றும் வர்த்தகர்கள் ஒன்றிணைந்து
செயற்படக்கூடிய அறிகுறிகள் தென்படுவதாக நமது நிருபர் தெரிவித்துள்ளார்.
எனினும், தற்காக அரசியல் சூழ்நிலையினால்
உணர்ச்சி மேலோட்டத்தில் உந்தப்பட்டு, மீண்டும் எதிர்காலத்தில் செயற்பாடற்று
சிதறிப்போகும் அமைப்பாக இல்லாமல் கூட்டுத்தலைமையை ஏற்று நடக்கும் பொறிமுறை
காணப்பட வேண்டிய தேவை இருப்பதை கூட்டத்தில் கலந்து கொண்ட பெயர் குறிப்பிட
விரும்பாத உலமா ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏற்கனவே பல இயக்கங்களாகப் பிரிந்து
கிடக்கும் சமூகம் இவ்வாறான ஒரு பொறிமுறைக்குள்ளாவது ஒன்றிணைவது பாராட்டப்பட
வேண்டியதும் அதே வேளை ஒருமித்த சமூகக் குரலில் அரசியல் அரங்கில்
கிடைக்கப்போகும் வரவேற்பு மற்றும் எதிர்விளைவுகளையும் பொறுத்திருந்து தான்
பார்க்க வேண்டும்.
எவ்வாறாயினும், இன்றைய முடிவுகள் சமூகத்திற்குள் நிலை மாற்றங்களை உருவாக்க வழி வகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
No comments:
Post a Comment