இதுகுறித்து முஸ்லிம் காங்கிரஸ்
செயலாளர் நாயகம் ஹசன் அலி, ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு வழங்கிய தகவல்கள் கீழ்வருமாறு,
அண்மையில் ரண்முத்து ஹோட்டலில்
ஜம்மியத்துல் உலமா சபையின் பிரதிநிதிகளும், முஸ்லிம் அரசியல்வாதிகளும்
கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது. இதன்போது உலமா சபை சார்பில் ஹலால்
தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உபகுழுவின்
தீர்மானத்தை தாம் எற்றுக்கொள்வதாக குறிப்பிடப்பட்டது. இதுவரை அமைச்சரவை உபகுழு
தனது தீர்மானத்தை பிகரங்கமாக்காத நிலையில் ஜம்மியத்துல் உலமா திடீரென இம்முடிவை
எடுத்திருப்பது எம்மை அதிர்ச்சியடைச் செய்கிறது.
முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக்
கூட்டம் எதிர்வரும் 23 ஆம் திகதி கூடுகிறது. இதுதொடர்பில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் தொடர்பிலும், ஹலால் சான்றிதழ் தொடர்பில்
ஜம்மியத்துல் உலமா சபையின் தீர்மானம் குறித்தும் நிச்சயம்
ஆராயப்படும். இதுவிடயத்தில் இலங்கை முஸ்லிம்களின் அதிகப்பட்ச
ஆதரைவப்பெற்ற கட்சியென்ற வகையில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது பகிரங்க
பிரகடனத்தை விரைவில் வெளியிடும்.
ஹலால் விடயத்தில் கைவைத்த பௌத்தசிங்கள
இனவாதிகள் தற்போது முஸ்லிம் பெண்களின் ஆடை விடயத்தில்
கைவைக்கவுள்ளனர். ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்திற்கும் எதிரான இந்த சவால்களை
வெற்றிக்கொள்ள அனைத்து முஸ்லிம் தரப்புகளும் இணைந்து பணியாற்ற
முஸ்லிம் காங்கிரஸ் அழைப்பு விடுக்கிறது. தனி ஒரு தரப்பாக எவரும்
செயற்பட்டு, முடிவுகளை அறிவிப்பதை விட்டுவிட்டு, இணைந்து செயற்படுவதே தற்போது முஸ்லிம்
சமூகத்திற்கு முன்னுள்ள முதன்மைத் தெரிவாகும் எனவும் ஹசன் அலி எம்.பி.
மேலும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment