Wednesday, March 20

முஸ்லிம்களுக்கு எதிரான நிலை குறித்து Organization of Islamic Cooperation (OIC) அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது !



இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் அநீதிகள் தொடர்பில், சவுதி அரேபியா, ஜித்தாவிலிருந்து இயங்கும், சுமார் 57 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட சவுதியை தளமாக கொண்டு இயங்கும்  இஸ்லாமிய கூட்டுறவுக்கான அமைப்பு Organization of Islamic Cooperation (OIC) கவலை வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபைக்கு அடுத்தபடியாக பல நாடுகளின் அரசுகள் அங்கத்துவம் வகிக்கும் இரண்டாவது பெரிய அமைப்பாக விளங்கும் இவ்வமைப்பிலிருந்து இலங்கை அரசாங்கத்திற்கு இது குறித்த கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாக சவுதி அரேபிய செய்தி நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கடிதம் கிடைக்கப்பெற்றமையை உறுதி செய்துள்ள இலங்கைத் தூதரகம், குறித்த விடயம் வெளியுறவுத் துறை அமைச்சின் கவனத்துக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதாக மறுமொழி வழங்கியிருப்பதாகவும் அத்தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மைக்கால நிகழ்வுகளில் தெளிவுடன் இருக்கும் இவ்வமைப்பு தற்போதைய நிலையில் இலங்கை அரசு மீது நம்பிக்கையிருப்பதாகவும், குறித்த விடயம் இலங்கை அரசாங்கத்தின் உடனடிக்கவனத்தைப் பெறும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
- மத்திய கிழக்கு நிருபர்

No comments:

Post a Comment