Tuesday, March 12

இன்னும் 2 வாரங்களில் ஹலால் சம்மந்தமான அமைச்சரவையின் முடிவு


ஹலால் தொடர்பிலான அமைச்சரவை உப குழுவின் முடிவுகள் இன்னும் இரண்டு வாரங்களில் வெளியாகும் என சிரேஷ்ட அமைச்சர் பௌசி தெரிவித்தார்.

அதுவரை ஹலால் தொடர்பில் எந்தவித கருத்துக்களையும் தெரிவிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.


அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா எந்தவித தீர்மானங்களை மேற்கொண்டிருந்தாலும் அமைச்சரவை உப குழுவின் முடிவுகள் வெளிவரும் வரை எதுவும் குறிப்பிட்ட முடியாது என அவர் தெரிவித்தார்.

இதேவேளை ஹலால் தொடர்பிலான அமைச்சரவை உப குழுவின் சிரேஷ்ட அமைச்சர் ரத்னசிறி விக்ரமநாயக்க தலைமையிலான இந்த குழு முன்னிலையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, பொது பல சேன மற்றும் வர்த்த சமூகம் ஆகியன கருத்துக்களை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment