Thursday, February 21

பொல்கஹவெல: இஸ்லாமிய கலாசார விழா- படங்கள்

பொல்கஹவெல அன்பாஸ் அமால்தீனின் ஏற்பாட்டில் இன ஐக்கியத்தை ஏற்படுத்தும் இஸ்லாமிய கலாசார விழாவும் மற்றும் பௌத்த சமய விஹாரைகள் மற்றும் பள்ளிவாசல்களுக்கு இரும்பு அலுமாரிகள் வழங்கும் நிகழ்வும் பொல்கஹவெல நகர மண்டபத்தில் 17 -02- 2013 அன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் அப்துல் சத்தார் மீலாத் விழா போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பதக்கும் சான்றிதழ்கள் வழங்கி வைப்பதையும் முக்கிய பிரமுகர்களாக கலந்து கொண்ட பௌத்த மத சமயத் தலைவர்கள் மாணவர்களுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கி வைப்பதையும் பொல்கஹவெல பிரதேச சபை உறுப்பினர் அன்பாஸ் அமால்தீன் அருகில் நிற்பதையும் வடமேல் மாகாண சபை உறுப்பினர் டிகிரி அதிகாரி, பொல்கஹவெல பிரதேச சபையின் தவிசாளர் லிவேரா உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்களைப் படங்களில் காணலாம்.

No comments:

Post a Comment