Sunday, February 17

ஹலால் தொடர்பிலான குழு செவ்வாய்க்கிழமை கூடும்

 ஹலால் தொடர்பிலான குழு செவ்வாய்க்கிழமை கூடும்


சிரேஷ்ட அமைச்சர் ரட்ணசிறி விக்ரமநாயக்க தலைமையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ள ஹலால் தொடர்பிலான குழு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கூடவுள்ளது.


நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறும் இந்த கூட்டத்தில் சலக முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அழைப்பிதல் விடுக்கப்பட்டுள்ளது.


இந்த கூட்டத்தில் ஹலால் தொடர்பில் விரிவாக கலந்துரையாடிய பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிப்பதற்காக அறிக்கையொன்று தயாரிக்கப்படவுள்ளது.


இதேவேளை ஹலால் தொடர்பில் முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்காவும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடவுள்ளது. இந்த விசேட கூட்டமும் செவ்வாய்க்கிழமையே நடைபெறவிருக்கின்றது.

No comments:

Post a Comment