கலைஞர்களுக்காக ஓய்வூதிய கொடுப்பனவு திட்டம் ஒன்றை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக கலாசார திணைக்களம் தெரிவித்துள்ளது.
´சுரக்கும்´ (கடவுள் பாதுகாப்பு) என்ற பெயரில் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஆலோசனைக்கு அமைய இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
அனைத்து துறை கலைஞர்களும் இதில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள்.
59 வயதிற்கும் குறைந்த கலைஞர்கள் ஓய்வூதிய திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும் எனவும் 60 வயதில் இருந்து வாழ்க்கையின் இறுதி வரை அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் எனவும் கலாசார திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் கலைஞர்கள் பிரதேச செயலகங்கள் ஊடாக விண்ணப்பங்களைப் பெற்று விண்ணப்பிக்க முடியும் என கலாசார திணைக்களம் கூறியுள்ளது.

No comments:
Post a Comment