முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட அந்தக் கட்சியின் ஆறு
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியால் நடவடிக்கை
எடுக்க முடியாது என கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு பின்
அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக
ஐக்கிய தேசியக் கட்சி நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டது.
இதன்படி ஐக்கிய தேசியக் கட்சியால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு எதிராக,
ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட அமைச்சர்கள் குழு ஆறு மனுக்களைத் தாக்கல்
செய்திருந்தது.
கடந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து அரசாங்கத்துக்கு மாறியதால் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் முஸ்லிம் காங்கிரஸுக்கும் தொடர்பில்லை என குறித்த மனுவில் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.
கடந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து அரசாங்கத்துக்கு மாறியதால் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் முஸ்லிம் காங்கிரஸுக்கும் தொடர்பில்லை என குறித்த மனுவில் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.
இந்த மனுக்கள் நேற்று விசாரிக்கப்பட்டதன் பின்னர் கட்சியை விட்டு
விலகியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என நீதிமன்றம்
தீர்ப்பளித்துள்ளது.
No comments:
Post a Comment