ஜெனீவா சென்றுள்ள கூட்டமைப்பின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: சம்பிக்க
இலங்கைக்கு
எதிராக துரோகமிழைக்கவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஜெனீவா
சென்றுள்ளனர். இவர்களுக்கு எதிராக அரசியலமைப்பின் 157 ஆவது பிரிவின்
பிரகாரம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சரும் ஜாதிக ஹெல
உறுமயவின் பொதுச் செயலாளருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
தமிழ் மக்களை மென்மேலும் அழிவை நோக்கி பின்தள்ளும் செயற்பாடுகளையே
சம்பந்தன் குழுவினர் தொடர்ந்தும் மேற்கொள்கின்றனர். இந்தியா மற்றும்
அமெரிக்காவிடம் மண்டியிட்டு பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முடியுமென
கூட்டமைப்பு நம்புவது வேடிக்கையானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment