Tuesday, February 19

ஹஜ் விவகாரத்தின் பெயரால் மல்லுக்கட்ட பௌஸியும் காதரும் மீண்டும் தயாராகின்றனர்!

Fowzy-Cader
இந்த ஆண்டுக்கான அரச ஹஜ் குழுவை பிரதமரும் புத்தசாசனம் மற்­றும் மத அலுவல்கள் அமைச்­சருமான தி.மு.ஜயரத்ன நியமனம் செய்துள்ளார்.
ஹஜ் குழுவின் இணைத் தலை­வர்களாக அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸியும் பிர­திய­மைச்சர் ஏ.ஆர்.எம்.அப்துல் காதரும் மீண்டும் நியமிக்கப்­பட்­டுள்ளனர்.
உறுப்பினர்களாக மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா மற்றும் டாக்டர் எஸ்.எம்.முஹம்மத் இக்பால் ஆகியோர் நியமிக்­கப்பட்­டுள்ளதாக பிரதமர் அலு­வல­கம் விடுத்தள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டும் அரச ஹஜ் குழு இணைத் தலை­வர்களாக அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸியும் பிர­திய­மைச்சர் ஏ.ஆர்.எம்.அப்துல் காதரும் நியமிக்கப்பட்டு அவர்கள் இருவருக்கும் இடையே கடும் மோதல் இடம்பெற்றது.
இதனால் ஹஜ் விவகாரம் பந்தாடப்பட்டது. முஸ்லிம் கலாசார திணைக்களம் திண்டாடியது. விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது.
இதன் எதிரொலியாக முஸ்லிம் கலாசார திணைக்கள பணிப்பாளர் நவவி அப்பதவியில் இருந்து தூக்கப்பட்டார்.
ஆகவே இம்முறையும் ஹஜ் விவகாரத்தின் பெயரால் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸியும் பிர­திய­மைச்சர் ஏ.ஆர்.எம்.அப்துல் காதரும் மல்லுக்கட்டுவார்கள் என எதிர்பார்க்கலாம்!

No comments:

Post a Comment