Wednesday, January 30

ஐ.நா. மனித உரிமை கவுன்ஸில் கூட்டத் தொடரை புறக்கணிக்க இஸ்ரேல் தீர்மானம்






மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஐ.நா. மனித உரிமை கவுன்ஸில் கூட்டத் தொடரை புறக்கணிக்க இஸ்ரேல் தீர்மானித்துள்ளது.முதல் முறையாக இஸ்ரேல் இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது நாட்டுக்கு எதிராக கடந்த முறை அசாதாரண பிரேரணை கொண்டுவரப்பட்டதால் இம்முடிவு எடுக்கப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

 கடந்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் மேற்குக்கரை உள்ளிட்ட பலஸ்தீன ஆக்கிரமிப்பு பிரதேசங்களில் சட்டவிரோத குடியிருப்புக்களை நிறுவியமை தொடர்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டதுடன் அந்நாட்டுக்கு எதிராக 5 தீர்மானங்களும் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில்  இம்முறையும் குறித்த கூட்டத்தொடரில் தமக்கெதிராக பிரேரணை ஒன்று கொண்டுவரப்படலாம் என்ற பயத்திலேயே குறித்த கூட்டத்தொடரை புறக்கணித்திருப்பதாக சர்வதேச அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment