பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தகவல் : தம்புள்ளை பள்ளிவாசல் அப்பள்ளிவாசல்
நிர்வாகத்தினரின் அனுமதி இல்லாமல் அவ் இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு
மாற்றப்படாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முஸ்லிம் அரசியல் தலைவர்களிடம்
உறுதிமொழி வழங்கியுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் என்ற அமைப்பினரிடம் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் இயங்கிவரும் ஸ்ரீலங்கா
முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் என்ற அமைப்பின் அமைப்பின் (Sri Lanka Muslim
Diaspora Initiative-UK) தலைவர் மற்றும் முக்கிய உறுப்பினர் கள் கடந்த
(01.07.2012) சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதி அமைச்சர்
எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வை அவரின் காரியாலய மஜ்லிஸில் சந்தித்தார்கள்.
இவ்வமைப்பின் இஸ்தாபகரும் தலைவருமான
எம்.எல். நசீர் அமைப்பின் முக்கிய உறுப்பினர்களான ஏ.சி.ஜுனைதீன், கே.
கலிலுர் ரஹ்மான், ஏ. மன்சூர் எம். றிஸ்வான் ஆகியோர் பிரதி அமைச்சரை
சந்திப்பதற்காக வருகை தந்திருந்தனர் .
இச் சந்திப்பின் போது, தம்புள்ளை
பள்ளிவாசல் தொடர்பில் அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, அப்பள்ளிவாசல்
நிர்வாகத்தினரின் அனுமதி இல்லாமல் எக்காரணம் கொண்டும் அவ் இடத்தில்
இருந்து இன்னொரு இடத்துக்கு பள்ளிவாசல் மாற்றப்படாது என ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஸ முஸ்லிம் அரசியல் தலைவர்களிடம் உறுதிமொழி வழங்கியுள்ளதாகவும்
அப்பள்ளிவாசல் நிர்வாகம் பள்ளிவாசல் வேறு இடத்துக்கு மாற்றப்படுவதை
விரும்பினால் அதை அரசாங்கம் தீர்மானிக்கும் எனவும் பிரதியமைச்சர்
ஹிஸ்புல்லாஹ் மேலும் தெரிவித்தார் .
No comments:
Post a Comment