Sunday, June 17

மூதூரில் புத்தர் சிலை நிறுவ முயற்சி! பிரதேச மக்களின் எதிர்ப்பினால் கைவிடப்படவுள்ளது



கடந்த சில தினங்களாக மூதூர் 3ம் கட்டை மலை எனுமிடத்தில் நடைபெற்று வரும் புதிய புத்தர் சிலை மற்றும் விகாரை அமைக்கும் பணிகள் கைவிடப்படவுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது.
கடந்த சில தினங்களாக மூதூர் 3ம் கட்டை மலை எனுமிடத்தில் நடைபெற்று வரும் புதிய புத்தர் சிலை மற்றும் விகாரை அமைக்கும் பணிகள் காரணமாக அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்துடன் காணப்படுகின்றனர்.
இப்பகுதி மக்களது ஜீவனோபாய தொழில் மலைக் கல்லுடைத்தல் மற்றும் விவசாயமாகும். மேற்படி நிகழ்வால் இத்தொழில்களை இழக்கும் அபாயம் உள்ளதால் மக்கள் விசனமடைந்த நிலையிலுள்ளனர்.


இது குறித்து பிரதேச மக்கள் மூதூர்த் தொகுதி அமைப்பாளர் நஜிப் அப்துல் மஜித் அவர்களிடம் முறையிட்டதைத் தொடர்ந்து அமைச்சர் ரெஜினோல்ட் குரே தலைமையிலான அமைச்சர்கள் குழு இன்று காலை கிழக்கு மாகாண ஆளுனர் மற்றும் மாவட்ட அரச அதிபர் ஆகியோருடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் பயனாக இத்திட்டம் கைவிடப்படவுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது.

No comments:

Post a Comment