இலங்கையில் முஸ்லிம்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காணாவிட்டால் தாம் பதவி விலகப்போவதாக அமைச்சர் ரிசாத் பதியுதீன் எச்சரித்துள்ளார்.
தற்போது முஸ்லிம்கள் எதிர்நோக்கி வரும் மத ரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வைக்காண ஜனாதிபதி அமைச்சர் மட்டக்குழு ஒன்றை அமைத்துள்ளார். எனினும் இதன்மூலம் உரிய தீர்வு காணப்படாவிட்டால் தாம் பதவி விலகப்போவதாக ரிசாத் குறிப்பிட்டுள்ளார்.
தம்புள்ளை மற்றும் தெஹிவளை பள்ளிவாசல் விடயங்கள் உரியமுறையில் கையாளப்படாமையே முஸ்லிம்கள் தொடர்பான பிரச்சினைகள் அதிகரிப்பதற்கான காரணம் என்று ரிசாத் பதியுதீன் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment