இன்று முஸ்லிகள் பரவலாக பெளத்த மதத் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகிறார்கள். இந்த அச்சுறுத்தல்களை கையாள்வதற்கு அகில இலங்கை ஜம்இயத்துள் உலமா விசேட அணியொன்றை உருவாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்று அதன் துணைச் செயலாளர் தாசீம் மௌலவி இன்றுதெரிவித்தார்.
பரவலாக இன்று முஸ்லிம்கள் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகிறார்கள் , தம்புள்ளை மஸ்ஜித் , குருநாகல் ஆரிய சிங்கள தோட்ட மஸ்ஜித்,அநுராதபுரம் மடாட்டுகம மஸ்ஜித் , கெக்கிராவ மஸ்ஜித் என்று பரவலாக முஸ்லிம்கள் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகிறார்கள். இந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவல்ல பலமான ஒரு அணியை உருவாக்க விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் பட்டுவருகிறது. இன்ஷா அல்லாஹ் இன்றோ நாளையோ அதற்கான விசேட கூட்டம் இடம்பெறும் என்று அகில இலங்கை ஜம்இயத்துள் உலமாவின் துணை செயலாளர் தாசீம் மௌலவி தெரிவித்தார் .
அவர் மேலும் தெரிவித்த தகவலில் குறித்த விசேட அணியில் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் அனைத்து தரப்பினரும் உள்வாங்கப்படுவர் சகல இஸ்லாமிய நிறுவங்களின் நிரதிநிதிகள் , தரீக்காகள் , ஜமாத்துகள், சகல அரசியல் கட்சிகளையும் சார்ந்தவர்கள்களில் இருந்து தகமையானவர்கள் உள்வாங்கப் படுவர் , அப்படி உருவாகப் படும் விசேட அணி இன்ஷா அல்லாஹ் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கையாள ஒரு பொறிமுறையை உருவாக்கி செயல்படவுள்ளது. குறித்த விசேட அணி முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் எதிர்கொள்ளப் போகும் அனைத்து சவால்களையும் எதிர்கொள்ளவுள்ளது அது பற்றிய விபரங்களை நான் பின்னர் அறியத் தருகிறேன் என்று தெரிவித்தார்.