Tuesday, May 8

ரீ.என்.எல். தொலைக்காட்சியில் இன்று செவ்வாய்கிழமை தம்புள்ள பள்ளிவாசல் விவகாரம்


ரீ.என்.எல். தொலைக்காட்சியில் இன்று செவ்வாய்கிழமை, 8 ஆம் திகதி, இரவு 9.30 மணிக்கு தம்புள்ள பள்ளிவாசல் விவகாரம் குறித்து ஆராயப்படவுள்ளது.


இந்நிகழ்வில் கடும்போக்கு பௌத்த குருமார், தாராளப் போக்குடைய பௌத்த குருமார், கொழும்பு பல்கலைக்கழக மூத்த விரிவுரையாளர்கள் உள்ளிட்டவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

 
இவர்களுடன் முஸ்லிம் கவுன்சில், முஸ்லிம் மீடியா போரம் தலைவரும், நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான என்.எம். அமீனும் கலந்துகொள்ளவுள்ளார்.


ஆப்கானிஸ்தானில் புத்தர் சிலையொன்றை உடைக்க தலிபான் போராளிகள் அப்போது உத்தரவிட்டிருந்த நிலையில் அதுபற்றிய விவாதம் இலங்கையில் மேலோங்கியிருந்தது. அதன்போதும் ரீ.என்.எல். தொலைக்காட்சி மேற்குறிப்பிட்ட பிரமுகர்களுடன் இதுபோன்ற தொலைக்காட்சி கலந்துரையாடலொன்றை ஏற்பாடு செய்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment