Thursday, May 31

இலங்கையும் ஈரானும் விசா இன்றிய பயணத்துக்கு விரைவில் ஒப்பந்தம்

 
[ வியாழக்கிழமை, 31 மே 2012, 07:02.21 AM GMT ]
இலங்கை மற்றும் ஈரானிய சுற்றுலாப் பயணிகள் விசா இன்றி பரஸ்பரம் பயணிக்க வழி செய்யும் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் இலங்கையும் ஈரானும் வெகு விரைவில் கைச்சாத்திடவுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் நியோமல் பெரோரா தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு அரசு முறைப் பயணமொன்றை மேற்கொண்டுள்ள ஈரானிய வெளிவிவகார பிரதி அமைச்சர் கலாநிதி அப்பாஸ் ஆராய்ச்சியுடனான இரு தரப்பு பேச்சுவார்த்தை குறித்து கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த ஏற்பாடு குறித்து இரு நாடுகளும் ஏற்கனவே இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், இரு நாடுகளுக்குமிடையேயான வர்த்தக உறவை விஸ்தரிப்பதும் குறிப்பாக தேயிலை ஏற்றுமதி மீதான வரிகளைக் குறைத்தல் பற்றியும் இலங்கை அரசு கூடிய கவனம் செலுத்தியதாகவும் அமைச்சர் நியோமல் பெரோரா குறிப்பிட்டார்.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 30, 31 ஆம் திகதிகளில் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நடைபெறவுள்ள 16 ஆவது அணி சேரா நாடுகளின் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவைக் கலந்து கொள்ளுமாறு கோரும் ஈரானிய ஜனாதிபதி மஹ்மூத் அஹமது நிஜாடின் அழைப்பு மடலை ஈரானிய வெளி விவகார பிரதி அமைச்சர் இச்சந்திப்பின் போது கையளித்தார்.

No comments:

Post a Comment