இந்திய எரிபொருள் நிறுவனமான ஐ.ஓ.சி. மீண்டும் எரிபொருள் விலையேற்றம் தொடர்பான கோரிக்கைளை இலங்கை அதிகாரிகளிடம் விடுத்துள்ளது.
கடந்த இரண்டு மாதங்களாக தாம் இந்த விலையுயர்வு குறித்த கோரிக்கையை விடுத்துவருவதாக ஐஓசி தெரிவித்துள்ளது.
இறக்குமதி வரிகளின் அதிகரிப்புக் காரணமாக பாரிய நட்டங்கள் ஏற்பட்டு வருகின்றன. எனவே அதனை ஈடுசெய்யும் முகமாகவே விலையுயர்வை கோருவதாக ஐஓசி தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் பெற்றோலின் விலையை 10 ரூபாவாலும்> டீசலின் விலையை 13 ரூபாவாலும் அதிகரிக்க ஐஓசி கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் 2003 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் ஐஓசி தற்போது நாடு முழுவதும் 157 எரிபொருள் நிரப்பு நிலையங்களை கொண்டுள்ளது.
இதேவேளை இலங்கையில் கடந்த மாதத்திலேயே எரிபொருட்களின் விலைகள் பாரியளவில் அதிகரிக்கப்பட்டன. இதன் காரணமாக ஏனைய பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment