Wednesday, February 1

அல்குர்ஆன் கல்வியின் தடைகள் பற்றிய சர்வதேச மாநாடு எகிப்தில் நடைபெறவுள்ளது.

 

புனித அல்குர்ஆன் கற்பதில் தடைகள் பற்றிய சர்வதேச மாநாடொன்றை
எகிப்தில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.எகிப்தின் சனத்தெகை மற்றும்உதவி ஆணைக்குழுவின் மேற்பார்வையில் உலக குர்ஆன் ஞாபக மன்றம் மற்றும்முஸ்லிம் இளைஞர் உலக மன்றம் என்பன இணைந்து இம்மாநாட்டை நடாத்தவுள்ளது. குர்ஆன் மனனமிட்டவர்களின் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி எனும் தொனிப்பொருளில் அல்குர்ஆன் கல்வியின் தடைகள் பற்றிய மாநாடுநடைபெறவுள்ளது. எகிப்தின் அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தினதும் உலக குர்ஆன் ஞாபக மன்றத்தினதும் அறிஞர்கள் மற்றும் புத்திஜீவிகள் இம்மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்.
எகிப்தின் அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் கல்விகற்குக் கொண்டிருக்கும் 80நாடுகளைச் சோந்த மாணவர்கள்,இம்மாநாட்டில் அல்குர்ஆன் கல்விகற்பதில் ஏற்படும் தடைகளை கலந்துரையாடல்கள் மற்றும் அதனை நிவர்த்தி செய்வதற்காக வழிமுறைகள் முன்மொழிவு பற்றிய அறிக்கைகள் போன்றவற்றை சமர்ப்பிக்கவுள்ளது.

No comments:

Post a Comment