Saturday, January 21

கைதியை விடுதலை செய்ய ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோர வேண்டியது சட்ட ரீதியானதல்ல: ரவூப் ஹக்கீம்

 
கைதி ஒருவரை விடுதலை செய்வதற்காக ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோர வேண்டியது சட்ட ரீதியான அவசியமாக கருதப்பட முடியாது என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம்
தெரிவித்துள்ளார்.
கைதி ஒருவரை விடுதலை செய்வதற்காக ஜனாதிபதியிடம் பொது மன்னிப்பு கோருவது வழமையான மரபே தவிர, அதனை ஓர் சட்டமாக கருத முடியாது. எனினும், சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஒருவரை விடுதலை செய்வதற்கான பொதுமன்னிப்பை வழங்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது.
இது அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என நீதியமைச்சர் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அல்லது அவரது உறவினர்கள், ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோரினால் பொதுமன்னிப்பு வழங்க முடியும் என அமைச்சர் அதாவுத செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
எனினும், அரசியல் சாசனத்தில் இவ்வாறு பொதுமன்னிப்பு கோர வேண்டிய அவசியம் பற்றி குறிப்பிடப்படவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல குறிப்பிட்டுள்ளார்.
இந்த வாதப் பிரதிவாதங்களில் இணைந்து கொண்ட நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம்,
கைதிகள் ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோர வேண்டிய சட்டத் தேவை இல்லை என்ற போதிலும், அரசியல் சாசனத்தின் அடிப்படையில் சிறைக் கைதிகளை விடுதலை செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment