எதிர்காலத்தில் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைதரும் தப்லீக் ஜமாஅத் உறுப்பினர்கள் தொடர்பாகப் பின்பற்றப்படவேண்டிய ஒழுங்கு முறையொன்றை வகுத்து செயற் படுத்துவதற்கு இணக்கம் காணப்பட்
டுள்ளது.குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத் தின் கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா நேற்றுமுன்தினம் நடைபெற்ற கூட்டத்தின்போது இந்த இணக்கப் பாடு காணப்பட்டிருப்பதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மெளலவி ரிஸ்வி முப்தி நேற்றுத் தெரிவித்தார்.
இந்த இணக்கப்பாட்டுக்கு அமைய தப்லீக் ஜமாஅத் தலைமையகமும், குடிவரவு குடியகல்வுத் திணைக்களமும் இணைந்து இந்த ஒழுங்குமுறையைத் தயாரிக்கவுள்ளது.சுற்றுலா வீசா பெற்றுவந்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள தப்லீக் ஜமாஅத் உறுப்பினர்களை திருப்பியனுப்புமாறு குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் விடுத்த அறிவித்தலின்படி நாம் செயற்பட்டுள்ளோம் என்பதையும் இந்தக் கூட்டத்தின்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
சுற்றுலா வீசாபெற்று வந்துள்ள ஜமாஅத் உறுப்பினர்கள் தொடர்பாக குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் விடுத்துள்ள அறிவுறுத்தல் தொடர்பாக நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்துக்கு உடனடியாகக் கொண்டுவந்தார்.இவ்விடயத்தை நியாயமாகவும், சுமுகமாகவும் தீர்த்துவைக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.இதேவேளை, இவ்விடயம் தொடர்பாக சுற்றடல் பிரதியமைச்சர் ஏ. ஆர். எம். காதர், சமயக் கலாசார விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சரான, பிரதமர் டி. எம். ஜயரட்னவின் கவனத்துக்கும் கொண்டுவந்துள்ளார்

No comments:
Post a Comment