முஸ்லிம் உலக நாடுகளின் முக்கியஸ்தர்கள் கருத்தரங்கில் பங்கு பற்றுவர் என்று தெரிவிக்கப்படுகின்றது . உலக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கலாநிதி அப்துல்லா பின் உமர் முக்கிய உரை நிகழ்த்துவார். இந்த மாநாட்டை பிரதமர் டி. எம். ஜெயரத்ன ரமடா ஹோட்டலில் அங்குரார்ப்பணம் செய்துவைகிறார்.
ஆரம்ப அமர்வில் வெளி உறவுகள் அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் சிறப்புரை நிகழ்தவுள்ளார்.கருத்தரங்கில் பங்கு கொள்ளும் வெளிநாட்டுப் பிரமுகர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 14 ஆம் திகதி விருந்துபசாரம் அளிப்பார். பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் 13 ஆம் திகதி விருந்துபசாரம் அளிப்பார்.
சவூதி அரேபியா, நியூஸிலாந்து, ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, துபாய், பாகிஸ்தான், சூடான், நைஜீரியா உட்பட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளும் இக் கருத்தரங்கில் பங்குபற்றுவர். உள்ளூரின் அறிஞர்களும் கருத்தரங்கில் பேராளர்களாகப் பங்குபற்றுவர். என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.