Tuesday, July 19

உள்வீட்டு துரோகியின் அறிக்கை:வெளிநாட்டு நிதியுதவியைப் பெறும் முஸ்லிம் அமைப்புகள் தீவிரவாதத்தைப் பரப்புகின்றன –ரியாஸ் சாலி



வெளிநாட்டு நன்கொடையாளரிகளிடமிருந்து நிதியதவியைப் பெறும் இலங்கையிலுள்ள முஸ்லிம் நிறுவனங்களின் நடவடிக்கைகளை அரசாங்கம் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என கொழும்பு தெவடகஹ பள்ளிவாசல் நிர்வாகிகளுள் ஒருவரும் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலியின் சகோதரருமான ரியாஸ் சாலி தெரிவித்துள்ளதாக இன்று வெளியான ‘LAKBIMA NEWS’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.


வெளிநாட்டவரிடமிருந்து நிதிகளைப் பெறும் முஸ்லிம் நிறுவனங்கள் இலங்கையில் முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்குமிடையிலான சமாதான வாழ்வுக்கு தடையாக இருப்பதாகவும் இவ்வாறான தீவிரவாத அமைப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

“இந்தக் குழுக்கள் வெளிநாட்டவரிடமிருந்து அதிகமான பணத்தைப் பெற்றுக் கொள்கின்றன. இந்த அமைப்புகளில் உள்ள சிலர் அரசாங்க நிறுவனங்களிலும் அங்கம் வகிக்கிறார்கள். அண்மைக் காலங்களில் காத்தான்குடி மற்றும் பேருவளை ஆகிய பகுதிகளில் நடைபெற்ற சம்பவங்கள் இதன் பின்னணியிலேயாகும். இதுபற்றி ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும்” எனவும் ரியாஸ் சாலி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கீழியங்கும் வக்பு சபைக்கான நிர்வாகிகளை நியமிப்பதில் சில முஸ்லிம் அரசியல்வாதிகள் தலையீடுகளை மேற்கொண்டுள்ளனர். இதில் நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் தீவிரவாத பின்புலத்தைக் கொண்டவர்கள்.

முஸ்லிம் சமய திணைக்களத்தின் நடவடிக்கைகள் ஜனாதிபதியின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டால் இவ்வாறான தீவிரவாத நடவடிக்கைகள் இடம்பெறமாட்டாது. இந்தக் குழுவினர் இஸ்லாத்தில் புதிய பிரிவு ஒன்றை ஏற்படுத்தி அதனைப் பரவலாக்கம் செய்ய முயற்சித்து வருகின்றனர் என்றும் ரியாஸ் சாலி குறிப்பிட்டுள்ளதாக லக்பிம நியூஸ் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment