Sunday, June 30

ஆசியாவிலேயே இலங்கையில்தான் மின்சார கட்டணம் அதிகம்- Proud to be a Sri Lankan


இலங்கையானது ஒரு கிலோவாற் மின்கட்டணத்திற்கு 0.37 டொலர்களை அறவீடு செய்வதால், ஆசியாவில் மின்சாரக் கட்டணம் மிகவும் அதிகரித்துள்ள நாடுகளில் இலங்கைம் ஒன்றாகக் காணப்படுகின்றது. 

இலங்கையில்  பயன்படுத்தப்படும் மின்சாரத்தின் மூன்றில் இரண்டு பகுதியானது நிலக்கரி அல்லது எரிபொருளைப் பயன்படுத்திப் பெறப்படுகிறது. வறட்சி நிலவும் காலங்களில் நீரிலிருந்து மின்சக்தியைப் பெறமுடியாது. 
2013ல் மின்சார உற்பத்தியில் 750 மில்லியன் டொலர்கள் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால் மே மாதத்திலிருந்து வரிவீதம் அதிகரிப்பதால் மின்சாரக் கட்டணத்தில் 225 மில்லியன் டொலர்கள் மேலதிக நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இலங்கை  மின்சார சபை தெரிவித்துள்ளது.

'முஸ்லிம் பெண்கள் நிகாப் அணியலாம் - வங்கிகள்' - ஞானசார தேரரின் முகமூடி கிழிந்தது


நிகாப் - முஸ்லிம் பெண்களில் சொற்ப தொகையினரால் அணியப்படுகின்ற ஓர் முகத்திரையாகும். பொது பல சேனா முஸ்லிம் சமூகத்தை எதிர்க்கின்ற போதெல்லாம் அடிக்கடி விமர்சனத்திற்குட்படுவது இந்த நிகாப் விடயம்தான்;. கடந்த வாரம் (ஜுன் 17) பதுளை நகரில் இடம்பெற்ற பொது பல சேனா கூட்டத்தின் போது, பொது பல சேனாவின் சர்ச்சைக்குரிய பொதுச் செயலாளர் 'கலகொடத்தே ஞானசார தேரர், (இவர் அரலிய பிளேஸ், தலஹேனா வில் அமையப்பெற்றுள்ள கிறிஸ்தவ கோயில் தாக்குதலுடன் தொடர்புபட்ட சுமார் 11 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டவர்) மீண்டும் நிகாபை தடை செய்யக்கோரி உள்நாட்டு வங்கிகளின் சார்பில் அழைப்பு விடுத்தார்.

ஞானசார தேரர் கூட்டத்தில் பேசுகையில், சில உள்நாட்டு வங்கிகள் தன்னோடு தொடர்பு கொண்டு நிகாப் அணிந்து வருகின்ற வாடிக்கையாளுடன் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவதில் பாரிய பிரட்சினைகளை எதிர்கொள்வதாகவும், இவை வங்கிகளுக்கு பெரும் இடையுறாகவும் இருக்கிறது என்று தனது அதிருப்தியை தெரிவித்திருந்தது. 'நிகாப் அல்லது புர்கா அணிகின்ற பெண்கள் வங்கிக்குச் சென்று, வங்கிக் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுகையில் அவர்களிடம் அடையாள அட்டையை காண்பிக்குமாறு வினவப்படும் போது, வங்கி உத்தியோகத்தர் முகம் திரையிடப்பட்டிருக்கின்ற பெண்ணின் அடையாளத்தை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள முடியாதுள்ளது' என்று ஞானசார தேரர் குறிப்பிட்டார். 'குறித்த பெண்ணிடம் முகத்தை காண்பிக்குமாறு வேண்டப்படுகையில் அவள்  மறுத்துவிடுகிறாள். இவ்வாறிருக்கையில் ஆடைக்குள் இருப்பது ஆணா அல்லது பெண்ணா என்று நாம் எவ்வாறு அறிந்து கொள்வது.?'

புத்தசாசன அமைச்சினால் மத மாற்றங்கள் தொடர்பாக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? - பொதுபல சேனா கேள்வி


புத்தசாசன அமைச்சினால் மத மாற்றங்கள் தொடர்பாக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன - பொதுபல சேனா

 
நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தில் உள்ள சட்டத்திட்டங்கள் மூலம் பௌத்த மக்களின் உரிமைகள் மீறப்படுவதாகவும் சிங்கள் பௌத்த மக்களை ஏமாற்றி நாடு முழுவதும் மிகவும் சூட்சுமான முறையில் செயற்படுத்தப்பட்டு வரும் மதமாற்ற நடவடிக்கைகளை காவற்துறை மா அதிபரின் தலையீட்டின் அடிப்படையில் உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
 
புத்தசாசனம் என்ன என்பதை விளக்கி கூற கூட முடியாத, நாட்டின் புத்தசாசன அமைச்சினால், நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும், இந்த மத மாற்றங்கள் தொடர்பாக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
ஹங்வெல்ல, கந்தானை, பேருவளை உள்ளிட்ட நாட்டின் பல பிரதேசங்களில் இவ்வாறான மாற்று மதங்களின் ஜெப நிலையங்கள் செயற்பாடுகள் காரணமாக  பல பௌத்த மக்கள் இடையூறுகளுக்கு முகம் கொடுப்பதுடன், ஏமாற்றப்பட்டு வருகின்றனர். இந்த மாற்று மதத்தினர், மக்களின் வறிய நிலைமை பயன்படுத்தி, அவர்களுக்கு தேவையானவற்றை வழங்கி, மத மாற்றம் செய்து வருகின்றனர். இது தார்மீகத்திற்கு எதிரான தவறு.
 
அடிப்படைவாத சமய அமைப்புகள் வெளிநாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், அவை இலங்கையில் மாத்திரம் செயற்பட அனுமதித்திருப்பது மிகவும் கவலைக்குரியது எனவும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். 

பாராளுமன்ற தெரிவுக் குழுவில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி பங்கேற்காது: ஹக்கீம்


hakeem அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக் குழுவில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி பங்கேற்காது என அதன்  தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.கண்டியில் இன்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப் பொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இனப் பிரச்சினைக்கு தீர்வு காண குறிப்பாக 13ஆவது அரசியலமைப்பு சட்ட திருத்தை மேற்கொள்ள  அரசாங்கத்தால் இந்த பாராளுமன்ற தெரிவு குழு அமைக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்படுகிறது.
அதேவேளை 13ம் திருத்தச் சட்டத்தை மாற்றி அமைப்பதற்கான முயற்சிகளில் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்பது, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுகிறது என்று கொள்ள முடியாது என்று முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முண்ணனி உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் இத் தெரிவுக் குழுவில் பங்கேற்காது என ஏற்கனவே அறிவித்துள்ளமை   குறிப்பிடதக்கது
இதேவேளை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள வடக்கு தேர்தலில் தமது கட்சி தனித்து போட்டியிடவுள்ளதாகவும் ஹக்கீம்  மேலும் தெரிவித்தார்.

2014 ஜனாதிபதித் தேர்தல் –ஜோதிடர் ஆலோசனை - அரசியல் களத்தில் பரபரப்பு!


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, வரும் 2014ம் ஆண்டில் அடுத்த ஜனாதிபதித் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கு உத்தேசித்திருப்பதாக நம்பகமான தகவலறிந்த வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது. ஜனாதிபதிக்கு மிக நெருக்கமான ஜோதிடர் ஒருவரின் ஆலோசனைப்படி அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக அலரி மாளிகை தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2014ம் ஆண்டின் இறுதிக்குப் பின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஜோதிட ரீதியாக சாதகமான பலன்கள் கிட்டுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று அவருக்கு நெருக்கமான ஜோதிடர் ஒருவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதனைக் கருத்திற் கொண்டே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, தனது பதவிக்காலத்தை மூன்றாவது தவணைக்கு நீட்டித்துக் கொள்ளும் வகையில் முன்கூட்டியே ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளார். மேலும் இந்தத் தேர்தலின் போது மாகாண சபை முறை ஒழிப்பு, சிறுபான்மை கட்சிகளுக்கு எதிரான புதிய நடைமுறைகள் போன்ற விடயங்களை முன்வைத்து அவர் பெரும்பான்மை சிங்கள மக்களின் அதிகூடிய ஆதரவைப் பெற்று ஜனாதிபதித் தேர்தலை வெற்றிகொள்ள முனைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம் இலங்கை மக்கள் மாகாண சபை முறையை எதிர்ப்பதாகவும், அதனை மாற்றியமைப்பதற்கு தனக்கு சர்வஜன ஆணையை வழங்கியுள்ளதாகவும் சர்வதேசத்திற்கு காட்டிக்கொள்ள முடியும் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கருதுவதாக தெரிகிறது. இதற்கிடையே ஜனாதிபதியின் காய் நகர்த்தல்கள் தொடர்பில் நம்பகமான தகவல்களை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சரத் பொன்சேகாவின் ஜனநாயக தேசிய முன்னணி போன்றவற்றை இணைத்துக் கொண்டு எதிர்கால அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் ஆர்வம் காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

வடமாகாண தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டி

நடைபெறவுள்ள வடக்கு, வட மேல் மற்றும் மத்திய ஆகிய  மாகாண சபைகளுக்கான தேர்தல்களில் தனித்து போட்டியிடும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கண்டியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் மேற்கொண்டுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்த கட்சியாக இருந்தாலும் அதன் தனித்துவம் பாதுகாக்கப்படும் என அவர் குறிப்பிட்டார். இதனால் தேர்தல்களில் தனித்து போட்டியிடுவதும் வேட்பாளர்களை தெரிவு செய்வதும் கட்சியின் தனித்துவமாகும் என அவர் தெரிவித்தார்.
எனினும் சில நேரங்களில் இந்த தீர்மானத்தில் மாற்றங்கள் ஏற்பாடலாம் என அமைச்சர் ஹக்கீம் மேலும் குறிப்பிட்டார்.

முஸ்லிம் பெண்களின் புர்கா + நிகாப் தேசிய ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் - முஸம்மிலின் லங்காதீப கட்டுரையிலிருந்து

“இனங்களுக்கிடையில் வேற்றுமையை உண்டுபண்ணக்கூடிய, தேவைக்குதவாத சமூகத்தனித்துவத்தை அளவுக்கு அதிகமாக வெளிப்படுத்தும் ‘’ கோணிபில்லா ” ( புர்கா / நிகாப் ) முறை இந் நாட்டின் தேசிய ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக உள்ளதுடன் ஏனைய சமூகங்களுக்கு மத்தியில் வீணான சந்தேகங்களை ஏற்படுத்தக் கூட்டியதுமாகும்”. என்று தேசிய விடுதலை முன்னணி ஊடக பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான  எம் முஸம்மில் தெரிவித்துள்ளார்.
2013/06/30 ந் திகதி லங்காதீப பத்திரிகைக்கு அவர் எழுதியுள்ள கட்டுரையொன்றில் மேற்படி கருத்து கூறியுள்ள அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

அரசிலிருந்து மு.கா. விலக வேண்டும் என நினைப்பது கோவணத்தை தலைப்பாகையாக அணிவது போன்றது: ஹக்கீம்






அரசிலிருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறவேண்டுமென சிலர் நினைப்பது கோவணத்தைக் கழற்றி தலைப்பாகை சுற்றுவது போன்ற ஒரு செயலாகும் என்று நீதிஅமைச்சர் றவூப் ஹகீம் தெரிவித்தார்.

(30.6.213) இன்று கண்டியில் நடந்த கூட்டமொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது-

வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராஜா?


வடமாகாண முதலமைச்சர் வேட்பாளர் மாவை

வட மாகாண சபைக்கானத் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அரசியற் கட்சிகள் தமது முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை தெரிவுசெய்யும் நடவடிக்கையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
 
இந் நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, கட்சியின் நீண்டகால உறுப்பினரும், சிரேஷ்ட தலைவர்களில் ஒருவருமான மாவை சேனாதிராஜாவை முதலமைச்சர் வேட்பாளராக களத்தில் இறக்க முயற்சிப்பதாக கூட்டமைப்பு வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது.
 
இது தொடர் பில் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக் கும் இதர கட்சிகள் மத்தியில் கருத்தொருமிப்பு காணப்படுவதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது. கிழக்கு மாகாணத்தின் இன்றைய சூழலை கருத்திற்கொண்டு வட க்கில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராஜாவை நிறுத்துவதே பொருத்தமானதாக இருக்குமென ஈ.பி.ஆர்.எல்.எப், டெலோ, புளொட்; ஆகிய கட்சிகள் தெரிவிக்கின்றன. 
 
தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இக்கட்சிகள் தேர்தலுக்குப் பின் னர் முதலமைச்சராக தெரிவு செய்யப்படுப வர் பாரிய சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். அந்த வகையில் சவால்களுக்கு முகம் கொடுக்கக்கூடியவர் மாவை சேனாதிராஜா என்பதே எமது கருத்தாகும்.
 
வட மாகாண சபைத் தேர்தலில் தமிழர சுக் கட்சியைச் சார்ந்த ஒருவரே முதலமைச் சர் வேட்டபாளராக நிறுத்­தப்படுவார். கூட் டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை. இந்த நிலையில் வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராஜாவை நிறுத்துவதே பொருத்தமானதாக இருக்குமென ஈ.பி. ஆர். எல். எப் செயலாளர் நாயகம் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம். பி.தெரிவித்தார்.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராஜாவை தெரிவு செய்வ தற்கு டெலோ மற்றும் புளொட் ஆகிய அமைப்புக்கள் முழு ஆதரவையும் வழங்கும் என்று டெலோ அமைப்பின் செயலாளர் நாயகம் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. தெரிவித்தார்.
 
கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பா ளர் பல சவால்களுக்கு தேர்தலுக்கு முன்னரும் பின்னரும் முகம் கொடுக்க வேண் டிய நிலை ஏற்படும். இந்த சவால்களை சமாளிக்கும் ஆற்றல் மாவை சேனாதிரா ஜாவிடம் இருக்கிறது என்றும் அவர் தெரி வித்தார்.

உங்கள் மீது நம்பிக்கையில்லை: பஷீர் சேகுதாவூத் ஹக்கீமுடன் மோதல்

hakeem and seguநேற்று சனிக்கிழமை இரவு முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற்ற அதியுயர்பீட கூட்டத்தில் அதிகளவான உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை. அத்துடன் கட்சித் தலைவருக்கும் அமைச்சர் பஷீர் சேகுதாவுதுக்கும் இடையில் கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
குறித்த கூட்டத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசால் காசிம், முத்தலிப் பாருக், தௌபீக் ஆகியோரும் மாகாணசபை உறுப்பினர்களான ஹாபிஸ் நஸீர், எம்.ஐ.எம்.மன்சூர், ஏ.எல்.தவம், ஹசன் மௌலவி ஆகியோர் கலந்துகொள்ளவில்லை.
இதேவேளை, இக்கூட்டத்தில் பஷீர் சேகுதாவுதுக்கும் ரவூப் ஹக்கீமுக்கும் சுமார் 15 நிமிடங்கள் கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. வடக்கில் ஆளும் கட்சியுடன் சேர்ந்தே முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட வேண்டும். தனித்துப் போட்டியிடுவது என்றால் அரசிலிருந்து விலகவேண்டும் என்ற பஷீர் சேகுதாவுத் தெரிவித்துள்ளார்.
ஆனால், அரசுடன் இருந்துகொண்டே கல்முனை மாநகரசபை மற்றும் கிழக்கு மாகாணசபையில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டதாகவும், அதேபோன்று வடக்கு தேர்தலிலும் அரசுடன் இருந்துகொண்டே தனித்துப் போட்டியிட முடியுமெனவும் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இதன்போது ரவூப் ஹக்கீமைப் பார்த்து, உங்கள் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லாத நிலையில் எப்படி உங்களுடன் இணைந்து பணியாற்றமுடியுமென பஷீர் சேகுதாவூத் கேள்வியெழுப்பியுள்ளார்.
இந்நிலையில், 13ஆவது திருத்த சட்டமூலத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான மாகாணசபை வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களிக்குமாறு எழுத்துமூலம் மாகாணசபை உறுப்பினர்களை கோருவதற்கு தீர்மானித்துள்ளதாக கட்சியின் உயர்பீட உறுப்பினர் கே.எம்.ஏ. ரசாக் தெரிவித்துள்ளார்.