தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள்
கொழும்பில் சந்திப்பு- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும்
கட்சிகளின் பிரதிநிதிகள் இன்றுமாலை 5மணியளவில் கொழும்பில் சந்தித்து
கலந்துரையாடியுள்ளனர். தமிழரசுக் கட்சி சார்பில் அதன் தலைவர்
இரா.சம்பந்தன், சுமந்திரன், ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் செயலாளர் நாயகம்
சுரேஸ் பிரேமச்சந்திரன், சர்வேஸ்வரன், ரெலோ சார்பில் சிறீகாந்தா, ஹென்ரி
மகேந்திரன், பிரசன்னா, புளொட் சார்பில் அதன் தலைவர் த.சித்தார்த்தன்
மற்றும் பத்மநாதன் ஆகியோரும் இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர். இதன்போது
13ஆவது அரசியலமைப்பு திருத்தம் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக
விவாதிப்பதற்கென அண்மையில் நியமிக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக்குழு
தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன், மேற்படி தெரிவுக்குழுவில் தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பு பங்குகொள்வதில்லையென முடிவெடுக்கப்பட்டது. இது
சம்பந்தமாக விரிவான ஓர் அறிக்கையினை விரைவில் வெளியிடுவதென்றும்
கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் எதிர்வரும் வட மாகாணசபைத்
தேர்தல் தொடர்பில் அடுத்தவாரம் கூடிப் பேசுவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை TNA
பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம்
வகிப்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
13ம் திருத்தச் சட்டத்தில் மாற்றங்கள் செய்வது குறித்து பாராளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதனைப் பாராளுமன்றத் தெரிவுக்குழுவாக கருத
முடியாது எனவும், இதனை அரசாங்கத்தின் தெரிவுக்குழுவாகவே கருத
வேண்டுமெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியின் பாராளுமன்றக் குழுத்
தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பது குறித்து இன்னமும் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
13ம் திருத்தச் சட்ட மூலத்தின் ஊடாக
மாகாணசபைகளுக்கு அதிகாரங்களை பகிர்வது குறித்த தமது நிலைப்பாட்டில் எவ்வித
மாற்றமும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் தொடர்பில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாகாணசபை அதிகாரங்கள் தொடர்பிலான தமது நிலைப்பாட்டில் மாற்றமில்லை என சம்பந்தன் தெரிவித்துள்ளார்.