Friday, March 22

எனது அமைச்சின் கடமைகளை பொறுப்பேற்றுவிட்டேன் – பசீர் சேகுதாவூத்


basheer-segu-dawood1எனது அமைச்சின் கடமைகளை நான் கடந்த 30.1.2013 அன்று பொறுப்பேற்றுவிட்டேன் என ஊக்குவிப்பு உற்பத்தி திறன் விருத்தி அமைச்சர் பசீர் சேகுதாவூத் காத்தான்குடி இன்போவிற்கு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில் நான் இன்னும் எனது அமைச்சின் கடமைகளை பொறுப்பேற்கவில்லை என ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. கடந்த ஜனவரி மாதம் இடம் பெற்ற அமைச்சரவை மாற்றத்தின் போது அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுப்பதவி எனக்கும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் நான் எனது அமைச்சின் கடமைகளையும் பொறுப்புக்களையும் கடந்த 30.1.2013 அன்று பொறுப்பேற்றுக்கொண்டேன்.
தற்போது இந்த அமைச்சின் நடவடிக்கைகள் இடம் பெற்றுவருகின்றன. எனது அமைச்சுக்குரிய அலுவலகம் இடமாற்றப்பட்டு அதன் நிர்மான வேலைகள் இடம் பெற்றுவருகின்றன. எனினும் நான் அந்த அமைச்சுக்குரிய அமைச்சர் என்ற வகையில் அதன் பொறுப்புக்களையும் கடமைகளையும் மேற்கொண்டே வருகின்றேன்.
மிக ரைவில் அதன் நிர்மான வேலைகள் அனைத்தும் நிறைவடைந்து விடுமெனவும் அமைச்சர் பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment