Friday, March 22

கிழக்கு மாகாண பாதுகாப்பு கட்டளைத் தலைமையகத்தினால் வழங்கப்படும் அறிவுரை



பேரன்புமிக்க இஸ்லாமிய மக்களே! அஸ்ஸலாமு அலைக்கும்.., 
  பல நூற்றாண்டு காலமாக சிங்கள,முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள் சமாதானமாகவும், சகோதரத்துவத்துடனும் இலங்கை மக்கள் என்ற ஒரே மன நிலையுடன் ஒன்றுபட்டு வாழ்ந்து வந்தனர்  என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை அல்லவா? அன்று அன்னிய நாட்டுப்படைகளின் எம் நாட்டின் மீதான ஆக்கிரமிப்பிற்கு எதிராக போராடியது மட்டுமல்லாது 1948இல் நமக்கு 'சுதந்திரம்' கிடைப்பதற்காக முஸ்லிம் இளைஞர்கள் மற்றும் கல்விமான்கள் வழங்கிய ஒத்துழைப்பினை எவராலும் மறந்துவிட முடியுமா? நீங்களும், நாமும் இலங்கைத் தாயின் சகோதர, ககோதரிகள் மற்றும் உறவினர்களாகும். அல்லாது வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்லர் என்பது முழு உலகமும் நன்கறிந்த உண்மையாகும். 
அவ்வாறான உறவு எமக்கிடையில் அன்றிலிருந்து இருந்ததால் நாம் என்றும் ஒரே இனம் என்ற ரீதியில் ஒன்றுபட்டு முன்னிற்கின்றோம்; அல்லவா? எமக்குள் இருக்கும் சகோதரத்துவத்தைக் கண்டு சகித்துக்கொள்ள முடியாத சில அடிப்படைவாதிகள் தந்திரோபாயமாக எமக்குள் பிரிவினையை ஏற்படுத்துவதற்கு முயற்சி செய்வது அம்பலமான ஒரு விடயம். வெளிநாட்டு நிதியில் வாழும் சில உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளினால் வழிநடாத்தப்படும் தலைவர்கள் எனும் இனங்காணப்பட்ட பிரிவினர் உங்களுடன், உங்கள் பிரதேசத்தில் இருக்கிறார்கள். நீங்கள் செய்ய வேண்டியது அவர்களை சரிவர இனங்கண்டு அவர்களின் போலியான பிரச்சாரங்களுக்குள் அகப்படாமல் இருப்பதுதான்! தெளிவுடன் ஆராய்ந்தால் அவ்வாரான சக்திகளின் அடிப்படை நோக்கம் உங்களுக்குப்புரியும். 
இந்நாட்டின் பாதுகாப்புத் தரப்பானது அன்றிலிருந்து உங்களையும், உங்களது ஊரையும் பாதுகாப்பதற்கு எவ்வளவோ தியாகங்களை செய்துள்ளார்கள். அதை கடந்த காலத்தில் நிரூபித்துள்ளதுடன், எதிர்காலத்திலும் அவ்வாரே செயற்படுவதற்கு அவர்கள் பொறுப்புடன் செயற்படுவார்கள். சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம்கள் மும்மதம் என்பது பாதுகாப்புப்படைக்கு பழக்கமான வார்த்தை அல்ல. இலங்கையின் அனைத்து இனங்களும் நாட்டின் பிரஜைகளே! அதற்குள் ஜாதி,மத,பேதங்கள் இல்லை அதனால் பாதுகாப்புப்படையினர் உங்களின் பாதுகாப்பிற்காக உழைக்கின்றார்கள்! நீங்கள் உள்நாட்டு, வெளிநாட்டு சதிகார சக்திகளுக்கு அடிபணியாது சமாதானத்துடன் வாழ்வது உங்களது கடமை. 
இன்று இலங்கைக்குள் எந்தவொறு இனரீதியான பிரிவுகளுக்கும் இடமளிக்கப்படவில்லை கடந்த மூன்று தசாப்த காலமாக இனங்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்தி தந்திரோபாயமாக வெறுப்பினை விஸ்தரிப்பதற்கு சில வெளிநாட்டு சக்திகள் முயற்சி எடுத்தார்கள். இருந்த போதும் இன்று இவை யாவும் தோற்றுப்போய் நாம் மேலான சமாதானத்தைப் பெற்றுக்கொண்டோம். அவ் யுத்தத்தில் தாய்நாட்டைப் பாதுகாப்பதற்கு முஸ்லிம் சகோதரர்கள் பலர் உயிர் நீத்தார்கள் அல்லவா? அப்படியாயின் நீங்கள் இந்நாட்டின் அபிமானம் கொண்ட இலங்கை இனமின்றி மாற்று அடிப்படைவாதிகள் கூறுவது போன்று வேறு இனம் அல்ல. இதை தெளிவுடனும், புத்தியுடனும் விளங்கிக்கொள்ளல் வேண்டும். பல்வேறு நாசகார சக்திகளிடம் ஏமாறாமல் பொறுப்பு வாய்ந்த இலங்கையர் என்று நாம் அனைவரும் ஒன்று பட்டு நாட்டைக்கட்டியெழுப்பவேண்டிய காலம் உருவாகியுள்ளது. நாம் ஜாதி, மத பேதங்களை தூண்டும் மாற்று சக்திகளிடம் ஏமாந்து நாட்டைப் அதள பாதாளத்திற்கு இட்டுச்சென்று எமது நாடு மீண்டும் பின்தங்கிச்செல்ல வழி செய்தால் எமது சந்ததியினருக்கு சிறந்ததோர் எதிர்காலம் இல்லாமல் போய்விடும். உங்களின் பிரதேசதமெங்கும் எப்போதுமில்லாதவாறு அபிவிருத்திப்பணிகள் வெள்ளம்போல் வருவதுடன் தங்களின் மதவழிபாட்டிற்கும், கலாசாரத்தை பாதுகாப்பதற்கும் நிம்மதியாக வாழ்வதற்கும் இன்று மேலான சுதந்திரம் உங்களுக்கு கிடைத்துள்ளது. பல்வேறு முகமூடியணிந்து வரும் நாசகார சக்திகளிடம் நாம் மாட்டிக்கொண்டால் நாமே நமது சுதந்திரத்தை இல்லாமல் ஆக்கிக்கொள்வதை தடை செய்ய எவராலும் முடியாது. பெற்ற சமாதானத்தை எமது எதிர்காலத்தில் சிங்கள, முஸ்லிம், தமிழ் என்ற எல்லா இனங்களும் ஒன்று பட்டு ஒரே இலங்கையராக பாதுகாக்க முடியும். அது எமது பிள்ளைகளுக்காக நாம் செய்யும் உயர்ந்த சேவையாகும். முஸ்லிம், சிங்களம், தமிழ் எனும் சகோதர இனத்தினுள் அடிப்படைவாத எண்ணத்தைத் தூண்டி பிரச்சினைகளை உருவாக்குவதற்கு முயற்சி செய்யும் அடிப்படைவாத சக்திகளை விரட்டியடிக்க நாம் அனைவரும் ஒன்று பட வேண்டும். எமது அழிவு அவர்களின் முன்னேற்றத்திற்கு வழியினை உருவாக்கும். எனவே நாம் ஒன்று பட்டிருப்பது அவர்களுக்கு நாசம்.!
' உறவுகளை அறுத்துக்கொள்ளாதீர்கள், ஒருவருக்கொருவர் பகைமையை வளர்தத்திடும் விவகாரங்களில் ஈடுபடாதீர்கள், ஒருவருக்கொருவர் கோபத்தையும், கால் புணர்வையும் வளர்த்துக்காள்ளாதீர்கள், மேலும் உங்களுக்கிடையே பொறாமை வேண்டாம், நீங்கள் உங்களுக்குள் சகோதரர்களாய் இருங்கள். அல்லாஹ்வின் அடிமையாய் வாழுங்கள். ஒருவர் தன்னுடைய ககோதரனோடுள்ள உறவை மூன்று நாட்களுக்கு மேல் துண்டிக்க அனுமதி இல்லை ' (அல்-ஹதீஸ். ஷஹீஹூல் புஹாரி)
ஜஷாக்கல்லாஹூ ஹைரா..!

No comments:

Post a Comment