Friday, March 22

அமைச்சரொருவர் பயந்தால் ஏன் முஸ்லிம்கள் பயப்பட மாட்டார்கள்


mujeeb rahmanநாங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படவில்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் சிங்கள மக்கள் மத்தியில் இந்த போலி பிரச்சாரத்தை இவர்களே தூண்டி விடுகின்றனர். என முஸ்லிம் உரிமைகளுக்கானஅமைப்பின் தலைவரும் மேல் மாகாண சபையின் ஐ.தே.க.உறுப்பினருமான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார் .
கொழும்பில் இன்றுகாலை முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பின் ஏற்பாட்டில் ஊடாகவியலாளர் மாநாடு ஒன்று இடம்பெற்றது.
இதில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே முஜீபுர் ரஹ்மான் இதனைத் தெரிவித்துள்ளார் .“உலமா சபை குறித்த முடிவினை நிர்ப்பந்தத்தின் பேரில் எடுத்ததா என்பது எனக்கு தெரியாது. அப்படியேதும் இருப்பின் உலமா சபையின் தலைவரே அது தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும்.


பொது பல சேனா அமைப்பின் அனைத்து குற்றச்சாட்டுக்களும் ஆதாரமற்றவை. ஹலால் விடயத்தில் பொதுபல சேனவிற்கு எந்த பிரச்சினையுமில்லை. ஏனென்றால் ஐக்கிய தேசிய கட்சியினரை பொது பல சேனவினர் பாராளுமனதில் சந்தித்தபோது முஸ்லிம்களுக்கு மாத்திரம் ஹலால் என்று தெரிவித்தனர்.
எனினும் சிங்கள மக்கள் மத்தியில் பிரபல்யமடைவதற்காக ஹலால் விடயத்தினை முன்வைத்து பிரபயல்யடைந்து விட்டனர். இதனால் தற்போது பொது பல சேனவின் பிரசாரம் ஹிஜாப் மற்றும் முஸ்லிம்களின் வியாபாரம் வரை விரிவடைந்து செல்கின்றது.
நாங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படவில்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் சிங்கள மக்கள் மத்தியில் இந்த போலி பிரச்சாரத்தை இவர்களே தூண்டி விடுகின்றனர்.
இதனாலேயே இன்று குருநாகலில் முஸ்லிம் பெண்ணின் ஹிஜாபை பறிக்க முற்பட்ட நபர் செருப்பினால் அடிக்கப்பட்டுள்ளார்.
எனவே முஸ்லிம்களுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளுக்கும் அவர்களே பதில் சொல்ல வேண்டும்.
பொது பல சேனவின் பின்னனியில் இந்த அரசாங்கமே செயற்படுவதாக நம்புகிறோம். இதனாலேயே காலியிலுள்ள பொது பல சேனவின் அலுவலகம் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டது.
முஸ்லிம்களுக்கு எதிரான பொது பல சேனவின் பிரசாரம் சங்கிலி போன்று தொடர்ந்து கொண்டு செல்கின்றது. ஹலால் சான்றிதழுடன் இந்த பிரச்சினை நின்று விடும் என அனைவரும் எதிர்பார்த்தனர். எனினும் அது நின்றுவிடவில்லை. ஹலால் இலச்சினை நாட்டில் இல்லா விட்டாலும் எங்களுக்கு ஹலால் தேவை.
இந்த ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையினை அரசாங்கம் பொறுப்பேற்று அரச நிறுவனங்களான இலங்கை தரச்சான்றிதழ் நிறுவனம் மற்றும் முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் ஆகியவற்று வழங்க முடியும்.
இவ்வாறான சர்ச்சைகளினால் 1983ஆம் ஆண்டு ஏற்பட்ட கலவரம் மீண்டும் ஏற்பட்டு விடுமோ என அமைச்சரொருவர் தெரிவித்திருந்தார். பொது பல சேனவின் நடவடிக்கையில் அமைச்சரொருவர் பயந்தால் ஏன் முஸ்லிம்கள் பயப்பட மாட்டார்கள்  இதற்கு அரசாங்கம் உடனடியாக முடிவு கட்ட வேண்டும்.
ஹலால் சர்ச்சையின்போது அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மற்றும் பொது பல சேன ஆகியவற்றை அழைத்து ஒரு மேடையில் வைத்து பேச்சு நடத்தியிருக்கலாம். எனினும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதனை மேற்கொள்ளவில்லை.
அத்துடன் இந்தியாவில் தேரர்களை தாக்கியது முஸ்லிம்களே என பொது பல சேன என தெரிவிக்கின்றனர். இது முற்றிலும் தவறாகும். தமிழ் நாட்டில் தேரர்கள் தாக்கப்பட்டமை இது முதற் தடவையல்ல. இதனால் இந்த போலி பிரச்சாரங்களை பொது பல சேன நிறுத்த வேண்டும்.
இந்த முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத கெடுபிடிகளை கண்டித்து எதிர்வரும் 25 திங்கட்கிழமை நாடளாவிய ரீதியில் ஹர்தாலுக்கு முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு அழைப்பு விடுக்கின்றது. இதற்கான பூரண ஆதரவினை முஸ்லிம்கள் வழங்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment