Friday, March 22

குற்றத்தடுப்புப் பிரிவுக்கு வருமாறு அசாத் சாலிக்கு அழைப்பு

வாக்குமூலம் ஒன்றை அளிக்கும்பொருட்டு நாளை வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு கொலன்னாவையில் உள்ள விசேட குற்றத்தடுப்புப் பிரிவுக்கு வருமாறு அசாத் சாலிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கறுவாத்தோட்ட பொலிசாரினாலேயே இன்று மாலை இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அசாத் சாலியின் அலுவலகம் தெரிவித்தது.
இன்று பிற்பகல் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அசாத் சாலியின் அலுவலகத்தை சோதனையிட்டுச் சென்ற பின்னர் அவரது அலுவலகத்திற்கு வந்த கறுவாத்தோட்ட பொலிசாரே நாளை வாக்குமூலம் அளிக்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment