Friday, March 22

ஒபாமா நேற்று இஸ்ரேலில் இன்று பலஸ்தீனில்

அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமா பலஸ்தீனுக்கு இன்று விஜயம் செய்துள்ளார்.அவர் கடந்த 4 வருட காலப் பகுதியில் பலஸ்தீனத்துக்கு விஜயம் செய்வது இதுவே முதற் தடவையாகும். நேற்று இஸ்ரேலுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையிலேயே அவர் இன்று பலஸ்தீனுக்கு விஜயம் செய்துள்ளார்.
ஒபாமாவை வரவேற்ற மஹ்மூத் அப்பாஸ் அவருடன் சுமார் ஒன்றரை மணி நேரம் பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.  
இரண்டரை வருட காலமாக பலஸ்தீன- இஸ்ரேல் சமாதான பேச்சுவார்த்தைகள் ஸ்தம்பிதமடைந்து உள்ள நிலையில் இரு தரப்பு தலைவர்களதும் கருத்தை செவிமடுப்பதை பராக் ஒபாமாவின் இந்த விஜயம் நோக்காகக் கொண்டுள்ளது.
இறைமையும் சுதந்திரமுமுள்ள பலஸ்தீனத்துடன் பலமான பாதுகாப்பு யூத தேசத்துக்காக உத்தரவாதமளிப்பது மத்திய கிழக்கில் இறுதியான சமாதானத்தை நிலை நாட்டுவதற்கு அவசியமாகவுள்ளதாக ஜெருசலேம் நகரில் ஆற்றிய உரையின் போது பராக் ஒபாமா குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று பராக் ஒபாமாவின் இந்த விஜயத்தின் போது பலஸ்தீனத்தில் ஹமாஸ் போராளிகளின் கட்டுப்பாட்டிலுள்ள காஸா பிராந்தியத்திலிருந்து போராளிகளால் ஏவப்பட்ட இரு ஏவுகணைகள் தென் இஸ்ரேலில் விழுந்து வெடித்துள்ளன. ஆனால் இந்தத் தாக்குதலால் எவரும் காயமடையந்ததாக இதுவரை அறிக்கையிடப்படவில்லை.
இதேவேளை ஒபாமாவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பலஸ்தீன மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.
.
Tags :

No comments:

Post a Comment